கறை
(எனது மெயிலில் வந்த ஒரு கதையை உங்களுக்காக....)
ஒரு அழகான கிராமம்.அந்தக் கிராமத்தின் தலைவருக்கு ஒரு பெண் இருந்தாள்.அவளைப் போல் ஒரு அழகிய பெண்னை யாரும் பார்த்ததும் இல்லை கேட்டதும் இல்லை.அந்தப் பெண் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண வாலிபனைக் காதலிக்க ஆரம்பித்து விட்டாள். இது தெரிந்ததும் மொத்த கிராமமும் அந்தக் காதலை எதிர்க்க ஆரம்பித்தது.இதனால் வேறு வழி தெரியாத காதல் ஜோடி ஊரை விட்டு ஒட தீர்மானித்து ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் காணாமலும் போய்விட்டனர். உடனே ஊரே சேர்ந்து காதல் ஜோடியைத் தேடியது. இருந்தும் அவர்களால் கண்டு பிடிக்கவே முடியவில்லை.
அதன் பிறகு அவர்கள் அந்த்க் காதலை ஏற்றுக் கொள்ள முடிவு செய்து செய்தித்தாளில் விளம்பரமும் கொடுத்தனர்.அதைப் பார்த்த காதல் ஜோடி உடனே ஊர் திரும்பியது. சந்தோஷப் பட்ட ஊர் மக்கள் அந்தக் காதல் ஜோடிக்கு பிரமாண்டமான முறையில் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
திருமணத்திற்குத் தேவையான பொருட்களை வாங்க நகரத்திற்குச் சென்றிருந்தனர்.அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு லாரி மோதி அந்த வாலிபன் அந்தப் பெண் எதிரிலேயே உயிர் துறந்தான். உடனே அந்தப் பெண்னும் மனநிலை பாதிக்கப்பட்டாள்.
ரொம்ப நாட்களுக்குப் பிறகு நினைவு திரும்பிய அந்தப் பெண் குடும்பத்தினருடன் வசித்து வந்தாள். திடீரென்று ஒரு நாள் அப்பெண்னின் தாய் ஒரு கனவு கண்டாள்.
அதில் ஒரு தேவதை தோன்றி அவள் மகள் அவளுடைய காதலன் நினைவாக வைத்திருக்கும் உடையில் இருக்கும் இரத்த்க் கறையை உடனே துவைக்க வேண்டும் என்றது,இல்லா விட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் எச்சரிக்கை செய்தது. அவள் தாய் கனவை மதிக்கவில்லை. அடுத்த நாள் அதே
தேவதை அந்தப் பெண்னின் தந்தையிடமும் கனவில் எச்சரித்தது.ஆனால் அவரும் அதைக் கண்டு கொள்ளவில்லை.
அடுத்த நாள் அப்பெண்னின் கனவிலேயே தோன்றி எச்சரித்தது.அவள் உடனே தாயிடம் கனவைப் பற்றிக் கூறினாள். அதன் பிறகே அதன் முக்கியத்துவம் உணரப்பட்டது.அவள் தாய் அதை துவைக்கக் கூறினாள். உடனே அந்தப் பெண்னும் அதைத் துவைத்தாள். இருந்தும் தேவதை மறுபடியும் அடுத்த நாள் கனவில் வந்து கறை சரியாகப் போகவில்லை என்று எச்சரித்தது. மறுபடியும் அப்பெண் அத்துணியைத் துவைத்தாள்.இருந்தும் கறை போகவில்லை.
அடுத்த நாள் காலையில் அழைப்புமணி ஒலிக்கவே அந்தப் பெண் கதவைத் திறந்தாள்.அப்போது கனவில் வரும் அதே பெண் நின்று கொண்டிருந்தாள். அவள் முகம் கனவில் வருவதைப் போல் கனிவாக இல்லாமல் வெளிறிப் போய் இருந்தது.உடனே இவள் பயத்தினால் அலறினாள்.
அந்தத் தேவதை கோபத்துடன் கூறியது,"லூசாடி நீ!,ஸர்ப் எக்ஸல் போடு கறை போயிடும்" என்றது.
இதைப் படித்ததும் உடனே என்னை உதைக்கத் தோணுமே உங்களுக்கு! நானே இதை எனக்கு அனுப்பியவரைத் தேடிக்கிட்டு இருக்கேன்.
வியாழன், பிப்ரவரி 19, 2009
திங்கள், பிப்ரவரி 16, 2009
விளையாட்டு மைதானங்கள் தேவை
சிறுவர்களிடம் சென்று சென்னையிலேயே பெரிய மைதானம் எது? என்று கேட்டு பாருங்கள். அனைவரும் ஒருமித்த குரலில் ‘மெரீனா பீச்’ என்று சொல்வார்கள்.
காரணம்? சென்னையில் மைதானங்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருவதுதான்.
ஒருசமயம் நண்பர் அவரது வீட்டிற்கு என்னை பைக்கில் அழைத்துச் சென்றார். நாங்கள் பைக்கில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென்று ஒரு பையன் குறுக்கே வந்துவிட்டான். சட்டென்று நண்பர் பிரேக்கை பிடித்துவிட்டார். நல்லவேளையாக அந்தப் பையனுக்கும் எங்களுக்கும் அடியேதுவுமில்லை.
பையனைத் தூக்கிவிட்டபடி ‘ஏம்ப்பா, ரோட்டுல விளையாடுறீங்களே! எங்கயாவது கிரவுண்ட்ல போய் விளையாட வேண்டியதுதானே?’ என்றேன்.
‘எங்க அங்கிள் கிரவுண்ட் இருக்கு. சொல்லுங்க?’ என்றான் பையன்.
நான் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திருதிருவென்று விழித்தேன். பையன் சொல்வதும் உண்மைதானே?
இன்றைக்கு உங்க ஏரியாவில எங்கே விளையாட்டு மைதானம் இருக்கிறது? என்று யாரையாவது கேட்டுப் பாருங்களேன். அப்போது தெரியும் பையன் சரியா? தவறா? என்று.
நான் பள்ளியில் படிக்கும்போதெல்லாம் சக பள்ளி மாணவர்கள் பள்ளி முடிந்ததும், வீட்டிற்கு வந்து கிரிக்கெட் பேட்டையோ, கால்பந்தையோ எடுத்துக்கொண்டு விளையாட கிளம்பிவிடுவார்கள்.
‘எங்கடாப் போற?’ என்ற அம்மாவுக்கு.
‘கிரவுண்டுக்கும்மா’ என்றபடி மைதானத்திற்குச் சென்றுவிடுவார்கள்.
விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் ஒருபுறம், புட்பால் ஒருபுறம், பூப்பந்து ஒருபுறம், கில்லி, கோலி, கபடி, முதுகுப்பந்து, ஏழு கல், பம்பரம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் என பல்வேறு விளையாட்டுகளை விளையாடுவார்கள்.
அதோடு மட்டுமல்லாது இந்த வாரம் இந்த மைதானத்தில் போட்டி, அடுத்த வாரம் அந்த மைதானத்தில் போட்டி என்று ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு மைதானத்தில் போட்டிகளை வைத்து விளையாடுவார்கள். அவர்கள் செல்லும்போது ஆளுக்கொரு சைக்கிளில் செல்வார்கள். அந்த ஏரியாவிலுள்ள எத்தனை மைதானங்கள் உள்ளதோ அத்தனை மைதானங்களிலும் அவர்கள் கால்பதித்திருப்பார்கள். இப்படி விளையாட்டு விளையாட்டு என்று ஒருபுறம் விளையாடினாலும் படிப்பிலும் கெட்டிக்காரர்களாய் இருந்தார்கள்.
ஆனால் இன்றைய மாணவர்களுக்கோ இந்த விளையாட்டுக்களில் சில விளையாட்டுகள் தெரியாமல் இருக்கிறது. அவர்களுக்குத் தெரியவில்லை என்றால் அதற்கு யார் காரணம்? கொஞ்சம் யோசிக்கலாமா?
எனக்கு தெரிந்தவரை மந்தவெளியில் ஒரு பள்ளிக்கூடத்தில் விளையாட்டு மைதானம் இருந்தது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் அங்கு ஏராளமான சிறுவர்கள், இளைஞர்கள் வந்து விடுவார்கள். ஆனால் இன்று அந்த மைதானம் அங்கில்லை. அது பள்ளியாக மாறிவிட்டது.
சரி வீட்டிலே விளையாடலாம் என்றால் அதுவும் முடியாது. முன்பெல்லாம் ஒரு வீட்டிற்கு முன்னும், பின்னும், அவ்வளவு ஏன் வீட்டைச் சுற்றி கூட இடம் இருக்கும். ஆனால் இப்போது வீட்டைச் சுற்றி இருக்கும் இடத்தினை சேர்த்து ஒரு அறையைக் கட்டிவிடுகின்றனர். வீட்டிற்கும் அடுத்தவீட்டிற்கும் இடைவெளியில்லாமல் வீட்டை கட்டுகின்றனர். காற்று போகக்கூட வாய்பில்லாமல் கட்டிவிடுகின்றனர்.
அதனால் வீட்டிற்குள்ளே அவர்களுக்கு விளையாட வாய்ப்பு அதிகம் கிடைக்கிறது.
சிலர் சிறுவர்கள் டென்னிஸ், கிரிக்கெட், செஸ் வகுப்புகளுக்கு சென்று விடுகிறார்கள். இன்டோர் கேம்ஸ் எனப்படும் வீட்டினுள்ளே விளையாடும் வீடியோ கேம்ஸ், கம்ப்யூட்டர் கேம்ஸ் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர். இப்படி வீட்டினுள்ளே இருந்து விளையாடுவதினால் அவர்களின் மனநலமும், உடல் நலமும் பாதிக்கப்படுவதாக அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
வீட்டில் கூட விளையாட இடமில்லாத சிறுவர்கள் வீதிகளில் விளையாடுகின்றனர். இப்படி வீதிகளில் விளையாடுவதால் அவர்களின் கவனம் முழுவதும் விளையாட்டிலேயே இருப்பதால் வீதிகளில் வரும் வாகனத்தின் மேல் செல்வதில்லை. இதனால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
சரி சிறுவர்கள்தான் இப்படி. சிறுமிகள் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போமா?
பள்ளி முடித்து வந்து பரதநாட்டியம், பாட்டு என்று சென்றுவிடுகின்றனர். இதனால் அவர்களும் விளையாடும் வாய்ப்பினை இழக்கிறார்கள். அன்றைய காலத்தில் சிறுமிகள் விளையாடிய பல்லாங்குழி, தாயக்கட்டை, பரமபதம், விடுகதை கூறுதல் போன்ற இன்றைய சிறுமிகளில் பலருக்கும் தெரியாது. இந்த விளையாட்டை யாராவது விளையாடுவதைப் பார்த்தால் அதியமாக பார்க்கின்றனர்.
இதையெல்லாம் பார்த்து வந்த சில அமைப்புகள் இன்றைய சிறுமிகளுக்கு இந்த விளையாட்டுகளைத் தெரியபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு போட்டிகள் வைத்து இந்த விளையாட்டுகளுக்கு புத்துணர்வு ஊட்டுகிறார்கள்.
பள்ளிகளில் கூட விளையாட்டு மைதானங்கள் என்று ஒன்று பார்ப்பதே அரிதாகி விட்டன. சில பள்ளிக்கூடங்களில் விளையாடுவதற்கு இடமே இருப்பதில்லை. ஆனால் விளையாட்டு பிரியர்டு ஒன்று வைத்திருக்கிறார்கள். இது எப்படி சாத்தியம்?
விளையாட்டு மைதானங்கள் உள்ள சில பள்ளிகள் மைதானத்தின் அளவை குறைத்து அங்கும் வகுப்பறைகள் கட்டிவிடுகின்றனர். இப்படி மைதானங்கள் எல்லாம் பள்ளிக்கூடங்களாக மாறினால் அங்கு படிக்கும் மாணவர்களும் அந்தப் பகுதியில் வாழும் சிறுவர்களும் எங்கு சென்று விளையாடுவார்கள்.
விளையாட்டு மைதானங்கள் உள்ள பள்ளிகள் தங்களது மைதானங்களை கிரிக்கெட் கிளப், டென்னிஸ் கிளப் என்று கிளப்களுக்கு விட்டுவிடுவதால் கிளப்புகள் அந்த மைதானத்தை பராமரிக்கின்றனர். இதனால் அந்த கிளப்புகளில் பயிலும் மாணவர்கள் மட்டுமே அந்த மைதானத்தில் விளையாட அனுமதி கிடைக்கின்றது. மற்றவர்கள் அனுமதி மறுக்கப்படுகிறது. அப்படியே கிடைத்தாலும் மைதானத்தில் ஒரு பகுதியில் தான் இடம் கிடைக்கிறது.
சென்னையில் மட்டும் சுமார் 42 லட்சம் மாணவர்களுக்கும் மேல் இருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் விளையாடுவதற்கு நூற்றுக்கும் குறைவான மைதானங்களே இருக்கின்றன. அந்த மைதானங்களில் சில குண்டும் குழியுமாக இருக்கின்றன. சில மைதானங்களில் ஆடு, மாடுகள் போன்ற விலங்குகள் உலாவுகின்றனர். மைதானங்களின் ஓரங்களின் குப்பைகள் தேங்கிகிடக்கின்றன. ஒரு சிலர் மைதானத்தில் துணிகளை உலர்த்துவதற்கும் பயன்படுத்துகின்றனர். சிலசமயம் அந்தப் பகுதியில் ஏதேனும் சாலை போடுவதாக இருந்தால், சாலைப் போடுவதற்கான பொருள்களை வைப்பதற்காகவும் மைதானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இப்படியிருந்தால் சிறுவர்கள் எப்படி விளையாட முடியும்?
இதனைப் போக்க சென்னை மாநராட்சி உரிய நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும். ஆங்காங்கே புதிய புதிய பூங்காக்களை அமைப்பதுபோல, புதிய மைதானங்களையும் மாநகராட்சி உருவாக்கினால் சிறுவர்களும், வருங்கால சந்ததியினர் விளையாடுவதற்கும் எதுவாக இருக்கும்.
விளையாட்டு மைதானங்கள் உருவாகும் வரை நாம் காத்திருப்போம்.
(16.02.2009ல் ஆல் இண்டியா ரேடியோவில் வாசிக்கப்பட்டது)
லேபிள்கள்:
வானொலி
சனி, பிப்ரவரி 14, 2009
காதலென்பது...
காலை 6 மணி.
வீட்டை விட்டு வெளியே வந்தான் அவன்.
ரோட்டில் நடமாட்டம் அதிகம் இல்லை. சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு கேட்டின் அருகில் நின்றான். இரண்டு வீடுகள் தள்ளி எதிர்புறமுள்ள வீட்டை உற்று நோக்கினான்.
யாரும் நிற்பதாக தெரியவில்லை. தலையைக் குனிந்து கொண்டான்.
‘க்ரீரீ..................ரீச்’
கதவு திறக்கப்படும் சத்தம்.
சத்தம் வந்த பக்கத்தைப் பார்த்தான். அந்த வீடுதான். மெல்ல மெல்ல தலை வெளியே தெரிந்தது.
உள்ளுக்குள் அவனுக்கு சந்தோஷம் பெருகெடுத்து ஓடியது. துள்ளிக் குதித்து ஒடணும்போல தோன்றியது. இருந்தாலும் ஏதோ முனங்கிக்கொண்டிருந்தான்.
அந்த வீட்டிலிருந்து மெல்ல அவள் வெளியே வந்தாள். அவனைப் போலவே அங்குமிங்கும் பார்த்தாள்.
கண்ணுக்கு எட்டிய தூரம்வரை யாரும் தென்படவில்லை. தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கினாள்.
சிறிது தூரம் சென்றபின் திரும்பிப் பார்த்தாள்.
அவனும் பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தான்.
சில அடிகளில் அவளை நெருங்கிவிடுவான்.
நெருங்கிவிட்டான்.
வெட்கத்தில் அவள் கொஞ்சம் விலகி சென்றாள். அவன் விடவில்லை. பின்தொடர்ந்தான்.
ஒரு வீட்டின் முன்புறமுள்ள மரத்தின் அடியில் நின்றார்கள்.
இருவரும் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள்.
‘ஏய்... ச்சூ... போ...’ வீட்டுக்காரர் விரட்டினார்.
அந்த இரண்டு நாய்களும் ஓடி தங்களின் வீட்டுக்குள் புகுந்து கொண்டன.
இதுவும் காதல் தானே?
லேபிள்கள்:
கதை
வெள்ளி, பிப்ரவரி 13, 2009
கல்யாண போதை
கல்யாணப் பத்திரிகை கொடுப்பதென்பது சுகமான அனுபவம் என்பதை மணமகன், மணமகளிடம் கேட்டால் தான் தெரியும்.
‘இன்னும் இத்தனை சொந்தக்காரங்களுக்குக் கொடுக்க ணும் நேரம் வேற இல்லை’ என்று பெற்றோர்கள்கூட அங்கலாய்த்துக் கொள்ளுவார்கள்.
ஆனால், மணப்பெண்ணோ, மணமகனோ சிறிதும் சலிக்காமல் நேரம் காலம் பார்க்காமல், நெருங்கிய நண்பர்கள், இந்நாள், முந்நாள் அலுவலக நண்பர்கள், நண்பர்கள் மூலம் அறிமுகமான நண்பர்கள், தனக்குத் தெரிந்த அத்தனைப் பேருக்கும் பிட் நோட்டீஸ் கொடுப்பதுபோல திருமண அழைப்பிதழை கொடுப்பார்கள்.
‘எனக்கு கல்யாணம்’ (‘சின்னத்தம்பி’ ஞாபகம்கூட வரும்.) என்று அழைப்பிதழைக் கொடுக்கும்போது அவர்களிடம் தோன்றும் வெட்கம், ஒருவித அசட்டு சிரிப்பு, சிறு புன்னகை என எல்லாவற்றையும் ரசிக்கத்தான் தோன்றும். சிலர் எல்லைமீறி அட்வைஸ் என்ற பேரில் அறுத்துத்தள்ளுவர். அதனையும் இவர்கள் கேட்டுத்தான் தீரவேண்டும். வேறு வழியில்லை. சிலர் என்ன கேள்விகேட்டாலும் இவர்களுக்கு காதிலேயே விழாது. சிந்தனையெல்லாம் அவளை சுற்றியும், அவனை சுற்றியும் இருக்கும்.
முன்பெல்லாம் மணப்பெண்ணும், மணமகனும் பார்த்துக் கொள்ளமாட்டார்கள். பேசிக்கொள்ளமாட்டார்கள். சந்தர்ப்பமில்லை. ஆனால் இப்போது செல்போன் ஒன்றுபோதும். செல்போனை எடுத்தால் கீழே வைக்கவே மனம் வராது. செல்போன் சார்ஜே தீர்ந்துபோய்விடும். சார்ஜ் போட்டுக்கொண்டே பேசுவார்களும் இருக்கிறார்கள். சிலர் சார்ஜரைத் தேடி அலைவார்கள். அப்படி அவர்கள் அலையும்போது போதைப்பொருளுக்கு அலைபவர்களை நினைவூட்டும்.
கல்யாணம் என்பதும் ஒருவித போதை தானே? அதைப் போகப் போக புரிந்துகொள்வார்கள். புது மணப்பெண்ணும், மணமகனும். என்ன நான் சொல்வது?
லேபிள்கள்:
பொது
புதன், பிப்ரவரி 11, 2009
பூஜாவா? பாவனாவா?
‘நான் கடவுள்’ பாலா படம்.
படம் அருமையாக இருக்கு, பயங்கரமா இருக்கு, பரவாயில்ல, வேஸ்ட் என்று பலரும் பலவிதமாய் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஜெயமோகன் நாவல் போல் படம் இல்லை என்கிறார்கள். நானும் அந்த நாவலை படித்ததில்லை. படிக்க வேண்டும்.
‘நல்லவேள தல தப்பிச்சுட்டாரு. இல்லன்னா...’ என்று பெருமூச்சு விடுகிறார்களாம் அஜீத் ரசிகர்கள் .
எனக்கென்னவோ பாலா படங்களில் ஒரு படமும் பிடிக்கவில்லை. ஏனென்று கேட்டால் தெரியாது. பாலா படத்திலெல்லாம் ‘கஞ்சா’வுக்கு முக்கியத்துவம் தருவதாக என் மனத்துக்கு படுகிறது.
ஆர்யா அரைமணி நேரம் தான் வருகிறாராம். இதற்காகவா மூன்று வருடங்கள் மெனக்கெட்டு நடித்தார்.
படத்தின் நாயகி பூஜா அருமையாக நடித்திருக்கிறார் அவருக்கு அவார்டு கண்டிப்பாக உண்டு என்று ச.ந. கண்ணன் அடித்து சொல்லுகிறார். காத்திருப்போம்.
பூஜா என்றவுடன்தான் எனக்கு ஞாபகம் வருகிறது?
நேற்று தற்செயலாக ‘நான் கடவுள்’ பாடல்களைக் கேட்பதற்காக, தமிழ்பீட். காம்-விற்குச் சென்றேன். ‘நான் கடவுள்’ படத்தின் ஸ்டில்லை கண்டேன். அதில் ஆர்யாவுடன் பூஜாவிற்குப் பதிலாக பாவனா இருக்கிறார்.
லேபிள்கள்:
பொது
திங்கள், பிப்ரவரி 09, 2009

இக்பால்
(இந்தித் திரைப்படம்)
என்னடா எல்லாரும் புதுசா ரிலீஸான ‘நான் கடவுள்’ பத்தி எழுதுறாங்கன்னா. நீ மட்டும் என்ன பழைய இந்திப் படத்தைப் பற்றி எழுதுற என்று நினைக்காதீங்க.
ஏன்னா...
·
சனிக்கிழமை தோறும் தூர்தர்ஷன் நேஷனல் சேனலில் இந்திப் படம் பார்ப்பேன். சில நேரங்களில் நல்லப் படங்களையும், சில நேரங்களில் குப்பையான படங்களையும் பார்க்க நேர்ந்திருக்கிறது.
இந்த வார சனிக்கிழமை ‘இக்பால்’ என்ற படத்தினை பார்த்தேன் இரண்டாவது முறையாக.
கிரிக்கெட் சம்பந்தமான படம். பிறவிலேயே காது கேளாத, பேசவும் முடியாத இக்பாலுக்கு கிரிக்கெட் என்றால் கொள்ளைப் பிரியம். சாதாரண கிராமத்தில், சாதாரண குடும்பத்தில் பிறந்த இக்பால் எப்படி இந்தியக் கிரிக்கெட் டீமில் இடம் பெறுகிறான் என்பதே கதை.
இக்பாலாக நடித்த பையன் அருமையாக நடித்திருக்கிறான். நஷருதீன் ஷா, கிரீஷ் கர்னாட் இருவரில் ஷா பேரை தட்டிச் சென்றுவிடுகிறார்.
இக்பாலின் தங்கை நடித்த சிறுமி, தாயாக நடித்த பெண், தந்தையாக நடித்தவர்கள் தங்களின் பங்கை சிறப்பாக செய்திருந்தனர்.
இந்த ஆறுபேரைச் சுற்றிதான் கதை நடக்கிறது. திரைக்கதையில் எங்கும் தொய்வில்லாமல் விறுவிறுப்பாக செல்கிறது. படத்தின் பிற்பாதியில் வரும் காட்சிகள் யாவும் மனதைத் தொடுகின்றன.
எனக்கு இந்தி தெரியாவிட்டாலும் இத்திரைப்படம் பார்ப்பதற்கு நன்றாக இருந்தது. அனைவரும் இந்த படத்தினை பார்க்கலாம்.
சூப்பர் இக்பால்!
லேபிள்கள்:
திரைப்படம்
வெள்ளி, பிப்ரவரி 06, 2009

நீங்களும் தயாரா?
தினமும் இரவு 8 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் செய்திகள் பார்ப்பது என் வழக்கம். அப்படிதான் அந்த சனிக்கிழமையும் மக்கள் செய்தியைப் பார்த்து கொண்டிருந்தேன். விளம்பர இடைவேளை வந்தது. கைவிரல் எல்லோரையும்போல் ரிமோட்டுக்கு சென்று சேனலை மாற்றியது. சேனல் மாறிக் கொண்டே வந்தது.
மெகா டிவியில் வந்து நின்றது. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. பேசிக்கொண்டிருந்தார். என்ன பேசுகிறார்? என்று ஆவலுடன் பார்த்தேன் மெகா டிவியை.
தான் இசையமைத்த ஒவ்வொரு பாடல்களின் பிறந்த, வளர்ந்த , உருவானதைச் சொல்லிக் கொண்டிருந்தார். அவர் சொல்லி முடித்ததும் அங்கு அமர்ந்திருக்கும் இசைக்குழுவினரால் அந்தப் பாடல் பாடப்படும்.
எம்.எஸ்.வி.யைப் பேட்டி எடுப்பவர் ஆதவன். ‘யார்?’ என்று கேட்பீர்கள். ‘கோலங்கள்’ தொடரில் தோழர் பாலகிருஷ்ணனாக வருபவர் (பார்த்திருப்பீர்களா!).
சில பாடல்கள் பாடும்போது, பாடிய முடிக்கும்போது ஆதவன் உணர்ச்சிவசப்பட்டு அழுதே விடுகிறார். எம்.எஸ்.வி., கண்ணதாசனைப் பற்றி பேசும்போது உணர்ச்சிவசப்படுகிறார் கண்ணீர் சிந்துகிறார். கர்சீப்புகள் நனைகின்றன. பார்க்கும் சிலருக்கும்தான்.
மனதுக்கு அமைதியான, ஆறுதலான, மென்மையான, நிறைவான, மகிழ்வான, சோகமான இசையை கேட்பதற்கு நீங்கள் தயாரா?
‘மெகா டிவி’யில் சனிக்கிழமை இரவு 8 மணிக்கும், ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கும் ‘என்றும் எம்எஸ்வி’ என்ற இந்த நிகழ்ச்சியைக் கடந்த சில வாரங்களாக பார்க்கும் நான், மெய் மறந்தேன் என்றே சொல்லலாம். நீங்களும் தயாரா?
லேபிள்கள்:
தொலைக்காட்சி
திங்கள், பிப்ரவரி 02, 2009
தியாகமா இது?
இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக தீக்குளித்த முத்துக்குமார் மரணத்தை தியாகம் என்று சொல்லும் பத்திரிகைககளுக்கு நடுவில் ‘தினமணி’ நாளிதழின் தலையங்கம் இதோ. அதுவே என் கருத்தும்...
இது தொடரக்கூடாது!
பத்திரிகையாளர் முத்துக்குமார் தீக்குளித்து இறந்த சம்பவம் மனிதாபிமானமும் இலங்கைத் தமிழர் பிரச்னையில் அக்கறையுமுள்ள அனைவரையும் உலுக்கியிருக்கிறது. இலங்கைப் பிரச்னையில் ஆட்சியாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு தீக்குளித்து இறப்பதுதான் வழி என்கிற அளவுக்கு முத்துக்குமாரைப் போன்ற இளைஞர்களிடையில் விரக்தி ஏற்படுத்தும் அளவுக்கு ஆட்சியாளர்கள் மக்களின் உணர்வுகளைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயம். இந்தப் பிரச்னையில் நாங்கள் முனைப்புடன் செயல்படுகிறோம் என்கிற நம்பிக்கையை ஆட்சியாளர்கள் ஏற்படுத்தாமல் போனது துரதிர்ஷ்டமே.
அதேநேரத்தில், தீக்குளிப்பது, உயிரை மாய்த்துக் கொள்வது, பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்துவது, இன்னும் ஒரு படி மேலே போய் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவது என்று உணர்ச்சிக்கு வடிகால் தேடுவதை மக்களாட்சியில் நம்பிக்கையுடைய எவருமே ஏற்றுக்கொள்ள முடியாது. முத்துக்குமாரின் மரணம், அவர் மீது அனுதாப உணர்வைத் தூண்டுமே தவிர இலங்கைத் தமிழர் பிரச்னைக்குத் தீர்வு கண்டுவிடுமா என்ன? பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் முல்லைத்தீவில் மிருகங்களைப்போல அலைந்துகொண்டிருப்பதைப் பற்றியே கவலைப்படாத இலங்கை அரசு, முத்துக்குமார் தீக்குளித்துவிட்டார் என்பதற்காக தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவா போகிறது?
பொறுப்புள்ள பத்திரிகையாளராக முத்துக்குமார் நடக்கவில்லை என்பது மட்டுமல்ல, ஏனைய இளைஞர்களுக்கும் தவறான முன்னுதாரணத்தை அல்லவா காட்டியிருக்கிறார். ஒற்றுமையுடன் பிரச்னைகளுக்காகப் போராடாதவர்கள் என்ற ஏளனக் குரலுக்கு இதுநாள் வரை உள்ளாகியிருந்த தமிழகம், இப்போது துணிவுடன் போராடத் தெரியாத கோழைகளின் பூமி என்கிற அவமானத்தையும் அல்லவா சுமக்க நேரிடுகிறது.
தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொள்வதன் மூலம் சமுதாயத்தின் கவனத்தை ஈர்ப்பது என்கிற நோய், 1965-ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில்தான் அறிமுகமானது. அப்படி இறந்தவர்களுக்கு மொழிப்போர் தியாகிகள் என்று கௌரவம் வழங்கப்பட்டதுமுதல் தீக்குளித்து இறப்பது பெரிய தியாகம் என்பதுபோலவும், ஆட்சியாளர்களுக்கு தங்களது உணர்வுகளை வெளிப்படுத்த இதுதான் சரியான வழி என்பதுபோலவும் ஒரு தவறான கண்ணோட்டத்தை இளைஞர்கள் மத்தியில் அது ஏற்படுத்தியது.
சுதந்திரப் போராட்டத்தில் அன்னிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்டவர்கள் அடக்குமுறை ஆட்சியாளர்களின் பெருங்கொடுமைச் சிறையையும், தடியடியையும், துப்பாக்கிக் குண்டுகளையும் எதிர்கொண்டு போராடினார்களே தவிர, தீக்குளித்துத் தற்கொலை செய்து கொள்ளவில்லை. அதற்குப் பெயர்தான் தியாகமே தவிர, ஒருங்கிணைந்து போராடுவதற்குப் பதிலாக உயிரை மாய்த்துக்கொண்டு இறப்பதற்குப் பெயரா தியாகம்?
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களை மட்டும் தியாகிகளாகக் கருதாமல், தீக்குளித்து இறந்தவர்களையும் தியாகிகளாக வர்ணித்ததன் விளைவுதான் இன்றுவரை உணர்ச்சிவசப்படும் இளைஞர்கள் தீக்குளிப்பதை ஏதோ வீரதீர சாகசம் என்று நினைத்துச் செயல்படுகின்றனர்.
எல்லா திராவிட பாரம்பரியக் கட்சிகளுமே வெவ்வேறு கட்டங்களில் இதுபோன்ற தீக்குளிப்புகளை ஆதரித்தன என்பதுதான் கசப்பான உண்மை. இப்படித் தீக்குளித்து இறப்பவர்களின் குடும்பங்களுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கொடுப்பது என்கிற கலாசாரமும் தொடங்கப்பட்ட பிறகு, பல்வேறு சந்தர்ப்பங்களில் சம்பந்தா சம்பந்தம் இல்லாதவர்கள் தீக்குளிப்பதன் மூலம் தங்களது குடும்பத்தின் வறுமையைப் போக்க முயன்ற சம்பவங்களும் உண்டு.
அதைவிட உண்மை, நமது தலைவர்களும் சரி, தங்களுக்காக இன்னின்னார் தீக்குளித்தார்கள் என்கிற செய்தி வெளிவருவதை விரும்புகிறார்கள் என்பதுதான். தீக்குளித்து இறப்பவர்களிடம் எங்களுக்கு அனுதாபம் கிடையாது என்று மனதைக் கல்லாக்கிக் கொண்டு நமது அரசியல்வாதிகளும் ஆட்சியாளர்களும் திட்டவட்டமாகச் சொன்னால் ஒழிய இந்த முட்டாள்தனமான கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட மாட்டாது.
முத்துக்குமார் எழுப்பியுள்ள கேள்விகள் அனைத்துமே நியாயமானவை. அவரது நான்கு பக்க வாக்குமூலம் அற்புதமான ஒன்று. சந்தேகமே இல்லை. அதற்காக தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொள்ளும் அவரது முட்டாள்தனம் "பகுத்தறிவு'ள்ள யாருக்கும் ஏற்புடையதல்ல. இதற்கு "தியாகம்' என்கிற முலாம் பூசி, தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தாமல் இருப்பதுதான் நமது அரசியல்வாதிகள் தமிழகத்துக்குச் செய்யும் மிகப்பெரிய உதவி.
இந்தத் தவறு முத்துக்குமாருடன் முடிந்துவிடட்டும். இனிமேலும் இது தொடரக்கூடாது!
நன்றி - தினமணி
லேபிள்கள்:
இரவல்
திங்கள், ஜனவரி 26, 2009
ஜெய்ஹிந்த்
எத்தனையோ பாடல் கேட்டாலும் பார்த்தாலும் தேசப் பக்திப் பாடல்களைக் கேட்கும்போது நம்மையும் அறியாமல் இனம்புரியாத உணர்வு ஏற்படுகிறது. சமீப காலமாக சென்னைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் இந்தப் பாடல்.குடியரசு தின நாளில் உங்களுக்காக...
லேபிள்கள்:
குடியரசு தினம்
வெள்ளி, ஜனவரி 16, 2009
மக்கள் தொலைக்காட்சியின் சிறப்பு
இந்த பொங்கலன்று தொலைக்காட்சிகள் எல்லாம் சின்னத்திரையில் முதல் முறையாக என்று படப் பொங்கல் வைத்தன. நான் அந்தத் தொல்லைக்காட்சிகளையெல்லாம் பார்க்காமல் இருந்ததற்கு என் அப்பாவிற்கு நன்றியைச் சொல்லிக்கொள்ள வேண்டும். மக்கள் தொலைக்காட்சியைப் பார்க்க நேர்ந்தது. மக்கள் தொலைக்காட்சியில் ‘மக்கள் விருது - 2008’ என்ற விருதினை சிறந்த கல்வியாளர், சிறந்த கிராமம், சிறந்த சுயஉதவிக் குழு, சிறந்த மருத்துவர், சிறந்த விவசாயி, சிறந்த பதிப்பகம், சிறந்த ஓவியர், சிறந்த எழுத்தாளர், சிறந்த ஆவணப்படம், சிறந்த குறும்படம், சிறந்த மாற்று திறனாளர், சிறந்த விளையாட்டு வீரர், சிறந்த மழலை மேதை என்று 31 பேருக்கு வழங்கினார்கள். இதில் சிறப்பு என்னவென்றால் இதுவரை திரையுலகம் பக்கமே தலைசாய்க்காத மக்கள் தொலைக்காட்சி முதன்முறையாக சிறந்த திரைப்படமாக ‘பூ’ படத்தினைத் தேர்வு செய்து அதற்கும் விருது வழங்கியுள்ளார்கள். சில விருதுகளை மேடையில் இருந்து கீழே இறங்கி வந்து வழங்கியது மனதை நெகிழ வைத்தது. மக்கள் தொலைக்காட்சி தனக்கென்று ஒரு பாணி வைத்திருப்பது பாராட்ட வேண்டிய விஷயமாகும். சிறந்த தொலைக்காட்சி எதுவென்று கேட்டால் ‘மக்கள் தொலைக்காட்சி’யை யார் கேட்டாலும் சொல்லலாம்.
லேபிள்கள்:
தொலைக்காட்சி
திங்கள், ஜனவரி 12, 2009
மார்கழியும் மாணவர்களும்
‘பையன் படிக்கச் சொன்னா, மாட்டேங்கிறான். என்ன செய்யுறதுன்னே தெரியலை. உங்ககிட்டதான் நல்லா பேசுவானே. கொஞ்சம் என்னான்னு கேளுங்களேன் சார்’ என்று புலம்பினார் பக்கத்து வீட்டு நண்பர்.
பக்கத்து வீட்டுப் பையன் படிப்பில் கெட்டிக்காரன். வகுப்பிலேயே, ஏன் பள்ளியிலேயே அவன்தான் முதல் மதிப்பெண் வாங்குபவன். அவனைப் பற்றி அவனுடைய தந்தையே இப்படிப் புகார் சொன்னதும் அதிர்ந்துபோனேன்.
அன்று மாலை - அந்தப் பையனிடம் பேச்சுக் கொடுத்தேன். ‘என்னப்பா! நீ நல்லா படிக்கிற பையனாச்சே! படிக்க சொன்னா மாட்டேங்குறியாமே! என்ன பிரச்னை?’ என்று மெதுவாகக் கேட்டேன்.
அந்த பையனுக்கு என்மீது அன்பும் மதிப்பும் உண்டு அதனால் நான் சொல்வதைக் கேட்டு அவனுக்குக் கோபம் வரவில்லை, அங்கிள், நானும் காலையில எந்திரிச்சு படிக்கணும்தான் உக்கார்றேன். ஆனா, நான் படிக்க உட்காரும்போது ‘சுவாமியே சரணம் ஐயப்பா’ன்னு பக்கத்துலருக்குற கோயில்ல இருந்து லவுட் ஸ்பீக்கர் அலற ஆரம்பிச்சுடுது. அந்த சத்தத்துல என்னால படிக்க முடியல. என்ன செய்யறது? நீங்க சொல்லுங்க’ என்றான்.
ஐயப்ப பக்தர்கள் மாலையணிந்து, விரதமிருந்து சபரிமலைக்கும் போகத் தயாராகும் காலம். ஆண்டுக்கு ஆண்டு இந்த பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. கண்டிப்பாக அருகிலிருக்கிற வீடுகளிலோ, சிறு கோயில்களிலோ மாலையில் பஜனை இருக்கும். அதற்கு முன்னோட்டமாக காலையில் பாடல்களை ஒலிபரப்புவார்கள். அதுதான் அந்தப் பையன் விஷயத்திலும் நடந்திருந்தது.
அவன் கூறுவது சரிதான். இது டிசம்பர் மாதம். இந்த மாதத்தில் நாம் அதிகம் கேட்கக் கூடியதாக வார்த்தைகள் ‘சாமி! ஐயப்பா’வாகத் தான் இருக்கும். கூடவே மார்கழி பிறந்துவிட்டால் எல்லாக் கோயில்களிலும் அதிகாலை நான்கு மணிக்கே ஸ்பீக்கர்கள் வழியாக, பக்திப் பாடல்கள் வீதிகளுக்குள் உலாவர ஆரம்பித்துவிடும்.
பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் காலம் இது. பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவியர்கள் அனைவரும் தேர்வுக்கு படிக்கின்ற முக்கியமான நேரம் அதிகாலை நேரம்.
அதுவும் பள்ளியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு இது முக்கியமான மாதமாகும். இந்த மாதத்தில் இருந்துதான் இதுவரை படித்த மாணவர்களும், படிக்காத மாணவர், மாணவிகளும் போட்டி போட்டுக்கொண்டு படிப்பார்கள். ஒவ்வொரு மாணவ, மாணவிகளும் தங்களின் ஒவ்வொரு பாடத்திலும் சிறந்த மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்கிற அக்கறையோடு அதிகாலையில் எழுந்து படிக்க ஆரம்பித்தால், இரவு படுக்கும்வரை படிப்பு, படிப்பு, படிப்பு என அதிலேயே மூழ்கிப் போவார்கள். கண்ணும் கருத்துமாக படித்து பாடங்களின் விவரங்களை அத்தனையையும் கைவிரல் நுனியில் வைத்திருப்பார்கள்.
அதிகாலையில் படிப்பு, பள்ளியில் சென்று படிப்பு, மாலையில் கோச்சிங் கிளாஸில் படிப்பு, திரும்ப வீட்டுக்கு வந்ததும் படிப்பு, இரவு 12 மணிவரை படிப்பு என இருபத்தினான்கு மணிநேரமும் படிப்பைத் தவிர வேறு எந்த சிந்தனையும் இல்லை என்பதுபோல் படிக்கிறார்கள் மாணவர்கள். உண்மையில் இந்த மாணவர்களின் படிப்புக்குச் சற்று சிரமம் தருவதாகத்தான் இருக்கிறது இப்படி ஒலிபெருக்கி வழியாக வரும் இசைப்பாடல்கள்.
மாணவர்களுக்கு இன்னும் சில நாளில் தேர்வுகள் தொடங்கிவிடும். அரையாண்டுத் தேர்வுகள், ரிவிஷன் டெஸ்டுகள், ஆண்டு இறுதித் தேர்வு என தேர்வு மயமாக இருக்கும்.
ஏற்கெனவே வடகிழக்குப் பருவ மழை அதிகம் பெய்த காரணத்தினால் அடிக்கடி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. சில மாணவர்களின் பாடப் புத்தகங்களும் மழை வெள்ளத்தில் அடித்துச் சென்ற பரிதாபமும் நமக்குத் தெரியும்.
அவர்களுக்கு எல்லாம் இப்பொழுதுதான் அரசு பாடப்புத்தகங்களைக் கொடுத்து கொண்டிருக்கிறது. இனிமேல்தான் அவர்கள் படிக்க வேண்டும். எழுதிவைத்த நோட்டுகள் எல்லாம் போனதினால் தற்போது அவர்கள் முதலில் இருந்து மீண்டும் படிக்க வேண்டிய சூழ்நிலை. மாணவர்களுக்கு மட்டுமல்ல, குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள் இவர்களுக்குமேகூட இப்படி ஒலிபெருக்கிகள் வழியாக சத்தமாக ஒலிக்கும் பாடல்கள் சற்றுத் தொந்தரவானவைதான்.
மாணவர்களாவது பள்ளிக்கு சென்று அல்லது கோச்சிங் கிளாசில் படித்துவிடுவார்கள். ஆனால் வயதானவர்களும், இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களும், குழந்தைகளும் எங்கு செல்வார்கள்?
சில இடங்களில் பூஜை செய்வதோடு நில்லாமல் அன்னதானமும் செய்கிறார்கள். அன்னதானம் செய்வது நல்ல விஷயம்தான். ஆனால் அன்னதானம் முடிந்தபின் எச்சில் இலைகளை சாலையில் ஏதோ ஒரு மூலையில் வீசுவிடுகிறார்கள்.
சாலையோரத்தில் இதுபோன்ற எச்சில் இலைகளை கொட்டுதால் சுகாதாரம் கெடுகிறது.
எச்சில் இலைகளை மொய்க்கின்ற ஈ, கொசுக்கள் கடித்தால் பல்வேறு நோய் பரவும்.
நம் உடல் நலம்தான் பாதிக்கும்.
இதனையெல்லாம் தவிர்ப்பதற்கு என்ன வழி?
ஐயப்பனுக்கு பூஜை செய்கிறவர்கள் தங்களின் வீட்டுக்குள்ளே பூஜை செய்து, ஐயப்பனின் பக்திப் பாடல்களை தங்களுக்கு மட்டுமே கேக்கும்படி சத்தத்தை வைத்துக் கேட்டால் யாருக்கும் தொந்தரவு இருக்காது. இப்படி செய்தால் அவர்களுக்கும் பூஜை செய்த மாதிரி இருக்கும். பள்ளி மாணவர்களுக்கும் இடைஞ்சல் இல்லாமல் இருக்கும்.
அதுபோல தங்களின் வீட்டிற்குள்ளே அனைவரையும் அழைத்து அன்னதானம் செய்து இலைகளை ஒரு ஓரமாகப் போட்டால், மறுநாள் குப்பை லாரிகள் வந்து அள்ளி செல்வதற்கு வசதியாக இருக்கும். நமது சுற்றுப்புற சுகாதாரம் கெடாது. நாமும் நலமாக இருக்கலாம்.
இவையெல்லாவற்றையும் விட மார்கழி மாதத்தில், அதிகலையில் கோயில்களில் இருந்து கிளம்பும், பக்திப் பாடல்களை பெரிய ஒலிபெருக்கிக் குழாய்கள் மூலமாக ஒலிபரப்பாமல், சிறிய அடக்கமான ஸ்பீக்கரில் கோயிலுக்கு மட்டும் கேட்கிற மாதிரி ஒலிபரப்பினால் மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். செய்வார்களா?
(20.12.2008ல் ஆல் இண்டியா ரேடியோவில் வாசிக்கப்பட்டது)
லேபிள்கள்:
வானொலி
தேவை பராமரிப்பு
நண்பர் ஒருவரை தினமும், மாலையில் திருமயிலை ரயில் நிலையத்தில் என் பைக்கில் கொண்டு விடுவது வழக்கம். அன்றும் அப்படிதான் அவரை ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு விட்டு, ஓர் ஓரமாக நின்று பேசிக் கொண்டிருந்தேன். எங்கிருந்தோ வந்த ஒரு டியூப் லைட் எங்களுக்கு அருகில் விழுந்து உடைந்தது. அது என் நண்பரின் முகத்தைப் பதம் பார்க்க வேண்டியது. கொஞ்சம் தள்ளி விழுந்தததால் நண்பர் தப்பித்தார்.
டியூப் லைட் வந்த திசையைப் பார்த்தோம். ரயில் நிலையத்தின் அருகில் வசிக்கும் சிறுவர்கள் சிலர் விளையாட்டாக டியூப் லைட்டை கால்வாயில் வீச முற்பட, அது தவறி ரயில் நிலைய படிக்கட்டுகளுக்கு அருகில் விழுந்திருந்தது.
1997ம் ஆண்டு, அக்டோபர் மாதம், திருமயிலை ரயில் நிலையம் திறக்கப்பட்டு, திருமயிலையிலிருந்து கலங்கரை விளக்கம், திருவல்லிகேணி, சேப்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, பூங்கா, கோட்டை வழியாக மின்சார ரயில் கடற்கரை நிலையத்தைச் சென்று அடைகிறது.இப்பொழுது மந்தைவெளி, கீரின்வேஸ் சாலை, கோட்டூர்புரம், கஸ்தூரிபாபா நகர், இந்திரா நகர், திருவான்மியூர், தரமணி, பெருங்குடி வழியாக வேளச்சேரி வரைக்கும் சென்று திரும்புகிறது. பீச் ஸ்டேஷன், வேளச்சேரி இந்த இரண்டு ரயில் நிலையங்களுக்கும் மையமாக விளங்குகிறது திருமயிலை ரயில் நிலையம். தினமும் சுமார் 100 தடவைக்கும் மேல் திருமயிலை ரயிலை நிலையத்தைக் கடந்து செல்கின்றன ரயில்கள்.
சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசல், அதனால் மக்களுக்கு ஏற்படும் தொல்லைகள், இதனைக் கருத்தில் கொண்டு, பறக்கும் ரயில் திட்டம், செயல்படுத்தப்பட்டது. மயிலாப்பூரிலிருந்து பாரிமுனைக்குப் பேருந்தில் சென்றால் குறைந்தபட்சம் அரைமணி நேரம் ஆகும். அதேபோல் வேளச்சேரிக்கு செல்ல வேண்டுமென்றால் ஒரு மணிநேரம் ஆகும். வேளச்சேரியிலிருந்து பாரிமுனைக்கு செல்வதென்றால் சுமார் ஒண்ணரை மணி நேரமாவது ஆகும். இந்த நேர கணிப்புகளெல்லாம் போக்குவரத்து நெரிசல் இல்லாதபோதுதான் சாத்தியம். பறக்கும் ரயில் மூலம் மயிலாப்பூரிலிருந்து பாரிமுனைக்கு 15 நிமிடங்களிலும், வேளச்சேரிக்கு 15 நிமிடங்களிலும், வேளச்சேரியிலிருந்து கடற்கரைக்கு அரைமணி நேரத்திலும் செல்ல முடியும். இதனால் மக்களுக்கு நேரமும் மிச்சமாகிறது.
திருமயிலை ரயில் நிலையத்திலிருந்து முன்புறமாக இறங்கி சென்றால் வலதுபுறம் கபாலீஸ்வரர் கோயிலுக்கும், இடது புறம் லஸ் கார்னருக்கும் செல்லலாம். பின்புறமாகச் சென்றால் சாயிபாபா கோவிலுக்குச் செல்லலாம்.
இவ்வளவு வசதிகளை அள்ளித்தரும் , பொது மக்களுக்குப் பயன்தரும் திருமயிலை ரயில் நிலையம் சரியான பராமரிப்பினால் இருப்பதுதான் சற்று சங்கடத்தைத் தருகிறது.
ரயில்கள் நின்று செல்லும் நடைபாதைகள் இரண்டாவது மாடியில் இருக்கின்றன. அதிகாலை நான்கரை மணியிலிருந்து நள்ளிரவு வரை ரயில்கள் வந்தும் போய்க் கொண்டுமிருக்கும்.
ரயில் நிலையக் கட்டடத்தின் முதல் மாடியில் முன்பதிவு அலுவலகமும், ஆர்.வி.என்.எல். என்ற ரயில்வே விகாஸ் நிகாம் லிமிடெட் அலுவலகமும் செயல்பட்டு வருகின்றன.
தரைத் தளத்தில் காவல் நிலையமும், துணை மின்நிலையமும் இருக்கின்றன. லிப்ட்டுகளும், நகரும் மின் ஏணிகளும் இருக்கின்றன.
நிலையத்தின் முன்புறத்திலும், பின்புறத்திலும் பயணச் சீட்டுக் கொடுக்கும் கவுண்ட்டர்கள் இருந்தாலும் தற்போது முன்புறத்திலுள்ள கவுண்ட்டர் மட்டுமே இயங்குகிறது. பின்புறத்தில் செயல்படவில்லை. ‘பீக் ஹவர்ஸ்’ என்று சொல்லப்படுகிற பரபரப்பான காலை, மாலை வேளைகளில் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் வாங்குவது பயணிகளுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. முன்புறத்தில் இருக்கும் கவுண்ட்டரில் இந்த நேரத்திலாவது இரண்டு கவுண்ட்டர்கள் செயல்பட்டால் பயணிகள் பயனடைவார்கள்.
இங்கே, தானியங்கி பயணச் சீட்டு இயந்திரம் ஒன்று இருக்கிறது. ஆனால், பெரும்பாலும் அதனை மக்கள் பயன்படுத்துவதில்லை. அதுபோல ப்ரீ பெய்டு கார்டு இயந்திரம் இரண்டு இருக்கின்றன. அதனை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கையும் மிக குறைவுதான்.
பல கோடி ரூபாய்களில் தயாரான மயிலாப்பூர் ரயில் நிலையம் சரியான பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது என வேதனை அடைகின்றனர் மயிலாப்பூர்வாசிகள். ரயில் நிலையத்தின் முன்புறமும், பின்புறமும் 24 மணி நேரமும் யாராவது சிலர் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். ரயில் நிலையத்தின் பின்பகுதியைக் கொல்லைப்புறம் என்றே சொல்லலாம். ஆடு, நாய் போன்றவைகள் படிக்கட்டுகளில் ஏறி அசுத்தம் செய்கின்றன. பின்புறத்தில் சாயிபாபா கோயில் வரைக்கும் உள்ள பிரம்மாண்டமான தூண்கள் இரவானால், விளக்கு இல்லாத காரணத்தினால் கழிப்பிடமாக மாறுகின்றன. இரவு நேரத்தில் இந்தப் பக்கம் வருவதற்கே பயப்படுகிறார்கள் பொதுமக்கள்.
வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் சாயிபாபா கோயிலுக்கு வரும் கார்கள் நிறுத்துமிடமாக இந்த இடம் உருமாறுகிறது.
ரயில் நிலையத்தை ஒட்டிய பகுதியில் சிறுவர்கள் கல்லெறிந்து விளையாடுவதால், கட்டடத்தின் கண்ணாடிகள் அனைத்தும் உடைந்த நிலையில் இருக்கின்றன. ஆங்காங்கே செடிகள் முளைத்திருக்கின்றன. அவ்வபோது தேன்கூடுகூடத் தென்படும்.
ரயில் நிலையத்தை உரிய முறையில் பராமரித்து, பின்புறத்தில் டிக்கெட் கவுண்டர் ஒன்றைத் திறந்து செயல்பட வைக்கலாம். இருட்டான பகுதிகளில் நன்கு வெளிச்சம் தரக்கூடிய விளக்குகளை பொருத்தினால் அந்த இடத்தைப் பாதுகாப்பாகவும், தூய்மையாகவும் வைத்திருக்க முடியும். முன்புறமும், பின்புறமும் சிலர் தூங்குவதை தடுப்பதற்கு இரண்டு பக்கமும் எப்போதும் காவலைத் துரிதப்படுத்தலாம். அவ்வபோது கட்டடத்தில் குவிகிற குப்பைகளையும், முளைக்கின்ற செடிகளையும் அப்புறப்படுத்தி, சுத்தம் செய்யலாம்.
சென்னையின் புராதனமான நகர்ப் பகுதி திருமயிலை.
உரிய முறையில் பராமரிக்கப்பட்டால், ‘திருமயிலை ரயில் நிலையம்’ அந்தப் பகுதிக்கே பெருமை சேர்க்கும்.
(19.12.2008ல் ஆல் இண்டியா ரேடியோவில் வாசிக்கப்பட்டது)
லேபிள்கள்:
வானொலி
மூச்சு முட்டும் நெரிசல்.
அது ஒரு காலை நேரம். குழந்தையை இரு சக்கர வாகனத்தில் வைத்து அழைத்துக்கொண்டு பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தேன். ஒரு சாலையைக் கடக்க வேண்டியிருந்தது. ஹாரன் அடித்துவிட்டுக் கடந்தேன். பாதிதூரம் போயிருப்பேன். அப்போதுதான் அந்த ஆட்டோ வந்தது. வலதுபக்கத்திலிருந்து படு வேகமாக, வந்தது. நான் சட்டென்று பிரேக்கைப் போட்டு என் வண்டியை நிறுத்திவிட்டேன். நல்லவேளையாக அந்த ஆட்டோவும் நின்றுவிட்டது. அந்த ஆட்டோவுக்குள் பள்ளிக் குழந்தைகள் இருந்தார்கள். எப்படியும் பத்து குழந்தைகளாவது இருப்பார்கள்.
‘ஏம்பா! ஆட்டோல குழந்தைகள வைச்சுகிட்டு இவ்வளவு வேகமா வர்றியே! கொஞ்சம் மெதுவாக வரக்கூடாதா?’ என்று ஆட்டோ ஒட்டுநரிடம் கேட்டேன்.
‘உனக்கென்னய்யா தெரியும்? இன்னும் ரெண்டு டிரிப் அடிக்கணும். உன் வேலைய பாத்துகிட்டு போய்யா!’ என்று சொல்லிவிட்டு ஆட்டோவை ‘விருட்’டென்று எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார் அந்த ஆட்டோ நண்பர். அவருடைய குரலில் எரிச்சல் விரவிக்கிடந்தது. நான் அந்த ஆட்டோ டிரைவரைக் குறை சொல்லவில்லை. சாலைகள் குறிக்கிடும்போது, குறைந்தபட்சம் ஹாரனை ஒலிக்கவேண்டும் என்கிற அடிப்படைகூடத் தெரியாதவரா அந்த ஆட்டோக்காரர்? இல்லை. ஆனால், அவசரம். காலில் சக்கரம் முளைத்த மாதிரியான அவசரம். அதுதான் அவரை ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கிறது.
தினமும் காலை 7 மணி முதல் 9,30 மணி வரைக்குமான நேரம் பரபரப்பான நேரம். குழந்தைகள் இருக்கும் எல்லா வீடுகளிலும் அனைவரும் பம்பரமாகச் சுழன்று கொண்டிருப்பார்கள். வீட்டில் மட்டும் இல்லாமல், சாலைகளிலும் அந்தப் பரபரப்புத் தெரியும்.
கிடைக்கிற சிறிய இடைவெளியிலும் மூக்கை நுழைத்துச் செல்ல முயலும் இரு சக்கர, மூன்று சக்கர வாகனங்கள். தனக்கும், தன் காருக்கும் எதுவும் நேர்ந்துவிடக்கூடாது என்கிற முன்னெச்சரிக்கையில் கார் ஒட்டுநர்கள். வேகமாக வந்து பயமுறுத்தும் தனியார் வேன்கள். குழந்தைகளை ஏற்றிச் செல்லும் பள்ளி வேன்கள், பேருந்துகள். இப்படி விதவிதமான வாகனங்களை இந்தநேரத்தில் பார்க்கலாம்.
இரு சக்கர வாகனத்தில் ஒருவர் சென்றுகொண்டிருப்பார். அவரைத் தவிர முன்னால் ஒரு குழந்தை, பின்னால் இரண்டு குழந்தைகள் இருப்பார்கள். கூடவே குழந்தைகளின் பள்ளிக்கூடப் பைகளும் சாப்பாட்டுக் கூடையும் இருபக்கமும் தொங்கிக்கொண்டிருக்கும்.
குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். குறைந்தபட்சம் ஓர் ஆட்டோவில் எட்டுக் குழந்தைகளாவது இருப்பார்கள். ஆட்டோவின் இரு புறங்களிலும் பிதுங்கி வழிகிற மாதிரி அவர்களுடைய பைகள் நீட்டிக்கொண்டிருக்கும். இது தவிர படு வேகமாகக் குழந்தைகளை ஏற்றி வரும் கார்கள். இந்த வாகனங்கள் அனைத்தும் மெதுவாக வருகின்றனவா என்றால் அதுதான் இல்லை. குழந்தைகளை ஏற்றிச் செல்கிறோமே என்கிற பொறுப்பில்லாமல்தான் பல வாகனங்கள் சாலைகளில் தலைதெறிக்க விரைகின்றன.
குழந்தைகளை சரியான நேரத்துக்குப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்பது நல்ல எண்ணம்தான். ஆனால், அதற்காக சாலைகளில் கண்மூடித்தனமாக வாகனங்களை ஓட்டுவது நமக்கும் நல்லதல்ல, நம் குழந்தைகளுக்கும் நல்லதல்ல.
‘சென்னை முழுவதும் இந்த நேரத்தில் வாகன நெரிச்சல் ஏற்படுகிறது’ என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. அதுவும் தென்சென்னையில் இந்த நெரிசல் மிக அதிகம். அதற்குக் காரணம், மயிலாப்பூர், சாந்தோம், மந்தைவெளி பகுதிகளில் சுமார் 50 மேற்பட்ட பள்ளிகள் இருப்பதுதான்.
குறிப்பாக மயிலாப்பூர் சாயிபாபா கோவிலைச் சுற்றி நிறைய பள்ளிகள் இருக்கின்றன. அர்ச்சுனனுக்கு கிளியின் கழுத்து மட்டுமே குறியாக தெரிந்ததுபோல, இந்தப் பள்ளிக்கு வரும் வாகன ஒட்டிகளுக்கு பள்ளியில் குழந்தைகளை எப்படியாவது விட்டுவிட வேண்டுமென்ற எண்ணம் மட்டும்தான் இருக்கிறது. அதற்காக இஷ்டத்துக்கு வண்டி ஓட்டுகிறார்கள். முறையில்லாமல், இண்டு இடுக்குகளில்கூட நுழைந்து விடுகிறார்கள். அதனாலேயே இங்கு தினமும் வாகன நெரிச்சல் ஏற்பட்டுவிடுகிறது.
ஒவ்வொரு வாகனமும் மற்ற வாகனத்தை முந்திக்கொண்டு முதலில் செல்லவேண்டும் என்ற எண்ணத்துடனேயே செல்கின்றனவே தவிர, எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட வேண்டும் என்ற எண்ணம் எதற்கும் இல்லை. இது மிகவும் வேதனையான விஷயம்.
இன்னும் சிலர் இருக்கிறார்கள். பள்ளி காவலாளி சொல்லச் சொல்ல கேட்காமல், பள்ளியின் கேட்டுக்கு அருகிலேயே கார்களை நிறுத்திவிட்டு போகின்றவர்களும் இருக்கிறார்கள். பள்ளி நிர்வாகம் எதற்கு வாயிலில் காவலாளிகளை ஒன்றுக்கு இரண்டாக நியமித்து அவர்களுக்கு சம்பளமும் கொடுக்கிறது? நம் குழந்தைகளை பாதுகாக்கத்தானே? அதற்கு நாமே ஒத்துழைக்க மறுத்தால் எப்படி? கார்களை இப்படி வாசலை அடைத்தபடி நிறுத்திவிட்டுப் போகிறவர்கள் இதை யோசித்துப் பார்க்கவேண்டும்.
இது மட்டுமல்ல. தண்ணீர் கேன் கொண்டு செல்லும் வாகனங்கள் காலை நேரத்தில்தான் தண்ணீர் கேன்களை எடுத்துச்செல்லவும், காலியான தண்ணீர் கேன்களை இறக்கி வைக்கவும் வந்து நிற்கும். அவர்களிடம் ‘ஏம்பா, ஸ்கூல் நேரத்துல இப்படி வந்து நிக்கிறீங்களே?’ என்று யாராவது கேட்க முடியுமா? கேட்டால், வேன் ஒட்டுபவர் பதில் எதுவும் சொல்ல மாட்டார். அந்தக் கேள்வி கேட்பவரை முறைத்துப் பார்ப்பார். கேள்வி கேட்டவர் மேற்கொண்டு எதுவும் பேசாமல், வாய்மூடி புலம்பிக் கொண்டே போக வேண்டியதுதான்.
பள்ளிக்குச் செல்லும் சாலைகளில் இரண்டு பக்கங்களிலும் இரண்டு சக்கர வாகனங்கள், கார்கள் ஆட்டோக்கள் விரையும்போது நெரிசல் வரத்தான் செய்யும். சில சமயங்களில் நெரிசல் ஏற்படும்போது, ஆட்டோ ஒட்டும் நண்பர்களும் சில பொது மக்களும் அதனை சீர்படுத்துவதைப் பார்த்திருக்கிறோம். இந்த எண்ணம் ஒவ்வொருவருக்கும் வரவேண்டும்.
இந்த நெரிசல் பிரச்னையை எப்படித் தீர்ப்பது. நாளுக்கு நாள் வாகங்னகளீன் எண்ணிக்கை அதிகமாகிவரும் இன்றையச் சூழலில் நெரிசல் என்பது தவிர்க்க முடியாத ஒன்றுதான். ஆனால், நெரிசலைக் குறைக்க நம்மால் முடிந்ததைச் செய்யலாம். எப்படி?
அதற்கு வாகன ஓட்டிகள் ஒவ்வொருவரும் முறையாக சாலைவிதிகளைக் கடைபிடிக்கவேண்டும். முடிந்தவரை குழந்தைகளை பள்ளிகளுக்கு சீக்கிரமே அழைத்துச் செல்லவேண்டும். பள்ளியில் குழநதைகளை விட்டுவிட்டு வரும்போது, பள்ளிக்குச் செல்லும் மற்ற வாகனங்களுக்கு ஒதுங்கி வழிவிடவேண்டும். சாலைகளில் முறைத்துக்கொண்டு நிற்காமல், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கவேண்டும். இவற்றை நாம் கடைபிடித்தாலே காலைப்பொழுது நன்றாக இருக்கும். கூடுமானவரைக்கும் நெரிசலில் இருந்து தப்பிக்க வழியும் பிறக்கும். எல்லாவற்றுக்கும் மேல் குழந்தைகளை சுமந்து செல்கிறோம் என்கிற எண்ணம் ஒவ்வொரு வாகன ஓட்டிக்கும் அழுத்தமாக மனத்தில் பதிய வேண்டும்.
(18.12.2008ல் ஆல் இண்டியா ரேடியோவில் வாசிக்கப்பட்டது)
லேபிள்கள்:
வானொலி
புதன், டிசம்பர் 31, 2008
பக்கிங்ஹாம் கால்வாய் சுத்திகரிப்பு - ஒரு பார்வை
சென்ற மாதம் வரைக்கும் சென்னையில் அடித்துக் கொளுத்திய வெயிலுக்கு சலித்துக் கொள்ளாத ஆட்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்கு சென்னைவாசிகளை சுட்டெரித்துக்கொண்டிருந்தது வெயில் என்பது நிதர்சனமான உண்மை. வியர்வை மழை, கசகசப்பு, புழுக்கம் என்று படாதபாடு பட்டுக்கொண்டிருந்தார்கள் சென்னைவாசிகள். இப்போது வடகிழக்குப் பருவ மழை பெய்யத் தொடங்கிவிட்டது. அப்புறமென்ன! இனிமேல் நாள்முழுக்க மழைக் குளியல் என்று உற்சாகப்படலாமா? ஆனால், அதுவும் முடியாது. என்ன காரணம்?
மழை பெய்தால் சென்னை முழுக்க மழைநீர் ஆறாக ஓடும். தெரு முழுக்க மழைநீர் தேங்கி நிற்கும். மழைநீரில் கலந்துகிடக்கும் குப்பை, கூளங்களில் கால்களை வைத்து நடக்க வேண்டியிருக்கும். இது சென்னையில் இருப்பவர்களைன் தற்போதைய கவலை.
சரி, சாலைகளில் மழைநீர் ஏன் தேங்குகிறது? அதற்கு யார் காரணம்? கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் அதற்கு முக்கியக் காரணம் நாமாகத்தான் இருக்கிறோம். சென்னையில் கால்வாய்களை ஒட்டி இருக்கும் பகுதிகளில் குடியிருக்கும் மக்களில் பெரும்பாலானவர்கள், தங்கள் வீட்டுக் குப்பைகளையும் கழிவுகளையும் அதற்கான குப்பைத் தொட்டிகளில் போடுவதில்லை. கால்வாயில் வீசி எறிந்துவிடுகிறார்கள். அதோடு, அவர்கள் வளர்க்கும் கால்நடைகளின் கழிவுகளாலும் கால்வாய்கள் மாசுபடுகின்றன. எல்லாக் குப்பைகளும் கால்வாய்களில் போய் அடைக்கலமாகின்றன. அடைத்துக்கொள்கின்றன.
கடைசியில், கால்வாய்களிலிருந்து கழிவுநீர் போக வழியில்லாமல், மண் அடைப்பு ஏற்படுகிறது. இதனால் கால்வாய் வழியாக நீர் ஓடுவதற்கு வழியில்லாமல், ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. அந்தத் தேக்கம் சாலை வரைக்கும் வந்து, அதனால் சாலைகளிலும் மழைநீர் தேங்குகிறது.
ஆனால், இந்த ஆண்டு இப்படி மழைநீர் தேங்குவதை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்துவிடவேண்டும் முடிவு கட்டியிருக்கிறது நம் பொதுப் பணித்துறை. அதற்காகவே, சென்னை நகரிலுள்ள முக்கிய கால்வாய்களில் தூர்வாரும் பணிகளை படுவேகமாக முடுக்கி விட்டிருக்கிறது. அந்தப் பட்டியலில் இருக்கும் ஒரு முக்கியமான கால்வாய் பக்கிங்ஹாம் கால்வாய்.
பக்கிங்காம் கால்வாயைத் தெரியாதவர்களே இருக்க முடியாது. உலகம் முழுக்க பிரபலமானது பக்கிங்ஹாம் கால்வாய். சென்னைக்குள் வருகிறவர்கள், இந்தக் கால்வாயைத் தாண்டித்தான் வரவேண்டும்.
1876ம் ஆண்டு சென்னையில் கடும் பஞ்சம் ஏற்பட்டபோது அப்போது ஆளுநராக இருந்த பக்கிங்ஹாம் என்பவர் மக்களுக்கு வேலை கொடுப்பதற்காக அடையாறையும் கூவத்தையும் இணைக்கும் கால்வாய் ஒன்றை வெட்டினார். அவர் நினைவாக இது பக்கிங்ஹாம் கால்வாய் என்றழைக்கப்படுகிறது.
ஒரு காலத்தில் படகில் சென்று வர்த்தகம் செய்வதற்காக பயன்பட்டிருக்கிறது இந்தக் கால்வாய். 170 கிலோ மீட்டர் நீளம் கொண்டது இந்தக் கால்வாய். 1950ஆம் ஆண்டு வரைக்கும் இதில் படகுப் போக்குவரத்து நடந்ததாகத் தெரிகிறது. அதற்குப் பிறகுதான் கழிவுநீரைத் தேக்கி வைக்கும் சாக்கடையாகக் கொஞ்சம் கொஞ்சமாக மாறியிருக்கிறது என்பது வேதனையளிக்கக் கூடிய விஷயம். முதல் வேலையாக இந்தக் கால்வாயைத்தான் சுத்தம் செய்ய இருக்கிறார்கள் பொதுப் பணித்துறையினர். அந்த வேலையைக்கூட பிரித்துவிட்டிருக்கிறார்கள். வடசென்னை பக்கிங்ஹாம், தென்சென்னை பங்கிங்ஹாம், மத்தியசென்னை பக்கிங்ஹாம் என மூன்று பிரிவுகளாக இந்தக் கால்வாயைப் பிரித்து சுத்தம் செய்ய இருக்கிறார்கள்.
எண்ணூரிலிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வரை இருப்பதை வடக்கு பக்கிங்ஹாம் கால்வாய் என்றும், சேப்பாக்கம் முதல் கோட்டூர்புரம் வரை இருப்பதை மத்திய பக்கிங்ஹாம் கால்வாய் என்றும், கோட்டூர்புரம் முதல் திருவான்மியூர், சோழிங்கநல்லூர் வரை தெற்கு பக்கிங்ஹாம் கால்வாய் என்றும் பிரிக்கப்பட்டிருக்கின்றன. இதுதவிர ஓட்டேரி, வேளச்சேரி, ஒக்கியம் மடுவு, போரூர், அம்பத்தூர், அயப்பாக்கம் போன்ற ஏரிகளின் உபரி நீர் செல்லும் மதகுகளையும் சீரமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இதற்காக அரசு 4.05 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.
சென்னை மாநகராட்சியும் தனது பங்குக்கு ரூ. 61 கோடியில் வெள்ளத் தடுப்பு பணிகளை மேற்கொள்வதாக அறிவித்திருக்கிறது.
வடகிழக்கு பருவமழையினால் சென்னையில் ஆங்காங்கே தேங்கும் மழைநீரை உடனுக்குடன் வெளியேற்ற 86 மோட்டார் பம்புக்களையும், விவசாயத் துறையிடமிருந்து பெற்ற 35 ஹெக்டேர் திறன் கொண்ட 15 பம்புகளையும் தயார் நிலையில் வைத்திருக்கிறது மாநகராட்சி.
மாநகராட்சி சார்பில் இதுவரை 51 கோடி ரூபாய் செலவில் 104 கி.மீ. நீளம் புதிய மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளன. 9 கி.மீ. நீளத்துக்கு வடிகால்கள் கட்டப்பட்டு வருகின்றன.
போர்க்கால அடிப்படையில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் செய்வதற்காக ஊழியர்கள், அலுவலர்கள், இளநிலைப் பொறியாளர்கள் என முக்கியப் பணியிலுள்ளோரை மழைக் காலத்தில் விடுமுறையில் செல்ல வேண்டாமென மாநகராட்சி கேட்டுக் கொண்டிருக்கிறது.
மேலும், சென்னையில் எந்தப் பகுதியில் மழைநீர் தேங்கி நின்றாலும், அதைப்பற்றிக் கவலை கொள்ளாமல் சென்னை மக்கள் மாநகராட்சியின் அவசர உதவி எண் ‘1913’ஐ தொடர்பு கொண்டு தெரிவித்தால் உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்கப்படும் என்றும், இந்தச் சேவை 24 மணி நேரமும் செயல்படும் என்றும் மாநகராட்சி தெரிவித்திருக்கிறது.
இனி, நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். சாலைகளில் மழைநீர் தேங்கிக்கிடப்பதைக் கண்டால் கண்டும் காணாமலும் போய்விடாமல் மாநகராட்சியின் அவசர உதவி எண்ணைத் தொடர்பு கொண்டு தெரிவிக்கவேண்டும். இப்படிச் செய்தால், மழையால் ஏற்படும் முகச் சுளிப்பிலிருந்து கொஞ்சமாவது சென்னைவாசிகள் தப்பிக்கலாம்.
(20.10.2008ல் ஆல் இண்டியா ரேடியோவில் வாசிக்கப்பட்டது)
லேபிள்கள்:
வானொலி
மல்டி லெவல் பார்க்கிங் கட்டடங்கள்!
சென்னையில் சில சமயம் சாலையில் நடக்கும்போது, மனிதர்களைவிட வாகனங்கள் அதிகமோ என்று எண்ணத் தோன்றும். எங்குப் பார்த்தாலும் வாகனங்கள். ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வாகனத்தில் ஏறிச் சென்றபடி இருக்கின்றனர். ஒரு நாள் நான் அண்ணாசாலையில் போய்க் கொண்டிருந்தபோது வாகன நெரிசல். தலையை உயர்த்திப் பார்த்தால் கண்ணுக்கு எட்டிய தூரம்வரை இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கார்கள், பேருந்துகள். அதுவும் ஜெமினி மேம்பாலத்தில் இருந்து பார்த்தபோது, ஆயிரக்கணக்கான வாகனங்கள் மட்டுமே கண்ணுக்கு தெரிந்தன. நடந்துசெல்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகத் தெரிந்தது.
இப்போது ஒரு புள்ளிவிவரத்தைப் பார்ப்போம். 1981ம் ஆண்டில் சென்னையில் இருந்தவர்களில் 100 நபர்களில் 4 பேரிடம் வாகனம் இருந்ததாம். 1991ம் ஆண்டில் 14 பேரிடம் வாகனம் இருந்ததாம். அதுவே 2001ம் ஆண்டில் 30 பேரிடம் வாகனம் இருந்ததாம். இந்தப் புள்ளி விவரத்தைக் கொடுத்திருப்பது ஒரு தனியார் நிறுவனம். இது ஒவ்வொரு வருடமும் சென்னையில் இயங்கும் வாகனங்களைக் கணக்கெடுத்திருக்கிறது. இந்தப் புள்ளிவிவரங்கள் எல்லாம் 2003ம் ஆண்டு வரை எடுக்கப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் மட்டும் தற்போது நாள் ஒன்றுக்கு சுமார் 500க்கும் மேற்பட்ட புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அதாவது நாளொன்றுக்கு 500 பேர் புதிதாக வாகனங்கள் வாங்குகிறார்கள். அப்படியென்றால், ஐந்து வருடங்கள் கழிந்தபிறகு வாகனங்களின் எண்ணிக்கை எப்படி இருக்கும்? உத்தேசமாக, 100 நபர்களில் 80 பேர் வாகனங்களை வைத்திருப்பார்கள்.
நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது ஒருபுறமிருக்கட்டும். அந்த வாகனங்களையெல்லாம் எங்கே நிறுத்தப்போகிறோம்? நிறுத்துவதற்கான இடம் மிகவும் அவசியமல்லவா? இன்றைக்கும் சென்னையில் வாகனம் வைத்திருப்பவர்களில் நிறையபேர் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டுப் போய்விடுகின்றனர். பெரும்பாலான அலுவலகங்களின் வாசலில், அலுவலக நேரம் ஆரம்பித்ததிலிருந்து முடியும் வரை வாகனங்கள் நிற்பதைப் பார்க்கலாம். அலுவலகம் மட்டும் அல்ல; பெரும்பாலான இடங்களில் வாகனங்களை நிறுத்த இடம் இல்லாதவர்கள் சாலையோரத்தில் நிறுத்திவிட்டுப் போய்விடுகின்றனர். இது அன்றாடம் நடக்கும் ஒரு நிகழ்வு.
தியாகராய நகரில் கடையில் துணிகளை வாங்கக் குடும்பத்துடன் வரும் ஒருவர் குடும்பத்தினரைக் கடையின் முன் இறக்கிவிடுவார். ‘வண்டியை நிறுத்திட்டு வந்துடறேன்’ என்று சொல்லிவிட்டு போவார். அவர் வாகனத்தை நிறுத்த இடம் தேடி, கண்டுபிடித்து, நிறுத்திவிட்டு வருதற்குக்குள் அவருடைய குடும்பத்தினர் துணிமணிகளை வாங்கியே முடித்திருப்பார்கள். அந்தளவிற்கு வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் மக்கள் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். தற்போது, சென்னையில் வாகனங்களை நிறுத்துவதற்காக 13,000 இடங்கள் தேவைப்படுகின்றன. ஆனால், தற்பொழுது 5,100 வாகனங்களை நிறுத்துமிடங்கள்தான் இருக்கின்றன. தற்போது சென்னை மாநகராட்சி இந்தக் குறைகளைக் களைய ஒரு திட்டம் கொண்டு வந்திருக்கிறது. அதற்காக, 161 இடங்களையும் தேர்ந்தெடுத்திருக்கிறது.
அதற்காக, ‘மல்டி லெவல் பார்க்கிங் கட்டடங்களைக் கட்டும் திட்டம்’ என்று அந்தத் திட்டத்தை வடிவமைத்திருக்கிறது.
முதலில் அப்பல்லோ மருத்துவமனைக்கு அருகிலுள்ள வாலஸ் கார்டன் பகுதியில் இந்தக் கட்டடத்தைக் கட்ட மாநகராட்சி திட்டமிட்டிருக்கிறது. இந்த மல்டி லெவல் பார்க்கிங் கட்டடத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களும், 200க்கும் மேற்பட்ட கார்களும் நிறுத்துவதற்கு வசதியாக இந்தக் கட்டடம் கட்டப்பட இருக்கிறது. இந்தக் கட்டடத்தில் வாகனங்களை நிறுத்த ஒவ்வொருவருக்கும் சுமார் 3 நிமிடங்கள்தான் ஆகுமாம். கட்டடத்துக்கு உள்ளே வரும் வாகனங்களையும், வெளியில் செல்லும் வாகனங்களையும் கேமராக்கள் மூலம் பதிவு செய்து கண்காணிக்க முடியுமாம். ஒரு வாகனத்தை நிறுத்த ஒருமணி நேரத்திற்கு 10 ரூபாயும், அதற்குமேல் ஆகும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் கூடுதலாக 10 ரூபாயும், அதிகபட்சமாக ஐந்து மணி நேரத்திற்கு 50 ரூபாயும் வசூலிக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள்.
மக்களுக்குப் பயன் தரும் இந்தத் திட்டத்தில் பின்னடைவு இருக்காதென்றும், மும்பை, கொல்கத்தா போன்ற இடங்களில் இத்திட்டம் செயல்பட்டுவரும்போது சென்னையில் ஏன் முடியாது என்கிற கருத்தும் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று.
இப்படி அதிக வாகனங்கள் வந்து செல்லும் பிராட்வே, தியாகராய நகர் போன்ற சில இடங்களை தேர்ந்தெடுத்து மல்டி லெவல் பார்க்கிங் கட்டடங்கள் அமைப்பதற்கு மாநகராட்சி முடிவெடுத்துள்ளது.
தியாகராய நகரில் இருக்கும் பெரிய துணிக்கடைகள், நகைக்கடைகள் தங்கள் வாடிக்கையாளர்கள் வாகன நிறுத்துவதற்காக தங்களது சொந்த செலவில் இடங்களை வாங்கி, அதில் வாடிக்கையாளர்கள் இலவசமாக வாகனங்களை நிறுத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்து அதில் வெற்றியும் பெற்றுள்ள நிலையில் சென்னை மாநகராட்சியால் இது முடியாமல் போகுமா என்ன?
இன்னும் சில வருடங்களில் சென்னையில் வாகன நிறுத்துவதற்கான கட்டடங்கள் அதிகப்படுத்தப்பட்டு, சென்னை சாலையோரங்களில் வாகனங்களே நிறுத்துவது இல்லை என்று சொல்லும்படி திகழப் போவது உண்மை. இத்திட்டத்தினால் சென்னை மக்கள் பயன் பெறப்போகும் நாட்களை எண்ணிக் கொண்டேயிருப்போம்.
(24.10.2008ல் ஆல் இண்டியா ரேடியோவில் வாசிக்கப்பட்டது)
லேபிள்கள்:
வானொலி
சர்வதேசத் தரத்தில் சென்னை விமானநிலையம்
நம் இந்தியப் பொருளாதரத்தில் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று அந்நியச் செலாவணி. அந்நிய முதலீடுகள், வெளிநாட்டில் இருந்து நம் நாட்டுக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகள் ஆகியவற்றின் மூலமாக வரும் அந்நியச் செலாவணி நம் இந்தியப் பொருளாதாரத்துக்கு மிகவும் தேவையான ஒன்று. இதை மனத்தில் ஓர் ஓரத்தில் ஆழமாகப் பதித்துக்கொண்டு, மேலே செல்வோம்.
இன்றைக்கு தரம் என்பது, அதிலும் உலகத்தரம் என்பது உலகில் உள்ள அனைவராலும் பேசப்படுகின்ற, பார்க்கப்படுகின்ற ஒன்றாக இருக்கின்றது. சாதாரண பேருந்து நிலையத்தில்கூட அடிப்படை வசதிகள் நவீனமாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிற காலம் இது.
இந்தச் சூழ்நிலையில்தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை விமான நிலையத்தை விரிவாக்கும் திட்டத்தை முன் வைத்தது ‘இந்திய விமான நிலையங்கள் கட்டுப்பாட்டு ஆணையம்.’ இதற்கு பொதுத்துறை முதலீட்டு வாரியமும் அனுமதி அளித்திருந்தது. அதன்பிறகு, பிரதமரின் தலைமையில் நடைபெற்ற மந்திரி சபை இந்தத் திட்டத்திற்கான ஒப்புதலை அளித்து, திட்டத்தை செயல்படுத்த 1808 கோடி ரூபாய் நிதியையும் ஒதுக்கியது. இன்றையச் சூழலில் சென்னை விமான நிலையத்தை விரிவாக்கும் திட்டத்திற்கான தேவை இருக்கிறது என்பதுதான் உண்மை.
இந்தியாவில் வெளிநாட்டுப் பயணிகளை அதிகம் ஈர்க்கும் விமான நிலையங்களில் ஒன்று சென்னை விமான நிலையம். மீனம்பாக்கம் என்றாலே, நமக்குச் சட்டென்று விமான நிலையமும் விமானங்களும்தான் நினைவுக்கு வரும். தாம்பரம் நோக்கிச் செல்லும் சாலையில் விரையும்போது, தலைக்கு மேல் பறக்கும் விமானங்களை இன்றைக்கும் குழந்தைகளைப் போல குதூகலமாகப் பார்க்கிறவர்கள் இருக்கிறார்கள்.
சில நாட்களுக்கு முன்னால்கூட ஒரு கிராமத்திலிருந்து பேருந்தில் சென்னைக்கு வந்த கிராம மக்கள், பேருந்தின் மேல் தளத்தின் மேல் நின்றுகொண்டு, விமான நிலையத்தை வேடிக்கை பார்த்ததை ஒரு நாளேடு புகைப்படமாக வெளியிட்டிருந்தது.
தற்போது சென்னை விமான நிலையம், ‘அண்ணா பன்னாட்டு விமான நிலையம்’, ‘காமராசர் உள்நாட்டு விமான நிலையம்’ என்று இரு பகுதிகளாக இயங்கி வருகிறது. இந்த இரு விமான நிலையங்களும்தான் தற்போது புதுப்பிக்கப்பட உள்ளன. சர்வதேச தரத்திற்கு சென்னை விமான நிலையம் உயரப்போகிறது.
தற்போது சில ஆயிரம் சதுர அடிகளில்தான் இந்த விமான நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. விரிவாக்கத்தின்படி, சுமார் 65000 சதுர அடியில் பன்னாட்டு விமான நிலையமும், சுமார் 75000 சதுர அடியில் உள்நாட்டு விமான நிலையமும் விரிவாக்கம் செய்யும் பணி விரைவில் தொடங்கவிருக்கிறது.
இதன்படி விமான நிலையத்தின் ‘ரன்வே’ எனப்படும் இரண்டாவது ஓடு தளம், மேலும் 832 மீட்டர் தூரத்திற்கு அதிகரிக்கப்பட இருக்கிறது. அதாவது, விமான நிலைய விரிவாக்கத்திற்குப் பிறகு, இரண்டாவது ஓடு தளத்தின் நீளம் சுமார் 2917 மீட்டராக இருக்கும். இந்த ஓடு தளத்துக்கு இணையாக 150 கோடி ரூபாய் செலவில் ‘டாக்சி வே’ அமைக்கப்பட இருக்கிறது. இவை மட்டுமில்லாமல், கூடுதலாக பார்க்கிங் வசதிகளும், அதிக விமானங்களை நிறுத்தும் வசதிகளும் செய்யப்பட இருக்கின்றன.
சென்னை விமான நிலையத்துக்கு தற்போது, ஒரு மணி நேரத்துக்கு 250 விமானங்களை இயக்கும் திறன் உள்ளது. அது விரிவாக்கத்துக்குப் பிறகு, 500 விமான இயக்கத் திறனாக அதிகரிக்கும்.
70களில் குறைந்த அளவே விமானங்கள் வந்து சென்ற சென்னை விமான நிலையத்தில் தற்பொழுது வருடத்திற்கு 500க்கும் மேற்பட்ட விமானங்கள் உலகில் பல்வேறு நாடுகளிலிருந்து வந்து செய்கின்றன என்பது நம்மில் சிலருக்குத் தெரிந்திருக்கலாம். சிலருக்கு தெரியாமலுமிருக்கலாம். விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்ட பிறகு எத்தனை விமானங்கள் வந்து செல்லும் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளலாம்.
வெளியூர் மற்றும் வெளிநாடு செல்லும் பயணிகளுக்கான Sitting Room, Waiting room அதாவது அமரும் அறை, காத்திருக்கும் அறை ஆகியவை விமானநிலையத்தின் முதல் தளத்திலும், அதே போல் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கான அறை கீழ்த் தளத்திலும் அமையவிருக்கிறது. புதிய விமான நிலையத்தை இயற்கை வெளிச்சத்தில் அமையுமாறு அமைக்கவிருக்கிறார்கள். இது மின்சாரச் செலவை கட்டுப்படுத்தும்.
பயணிகளை வழி அனுப்ப மற்றும் வரவேற்க வருவோரின் வாகனங்கள் நிறுத்துவதற்கு சுமார் 47000 சதுர அடியில் ‘மல்டிலெவல் கார் பார்கிங் வசதி’ தரைத் தளத்திலும், கீழ் தளத்திலுமாக அமைக்க, பணிமேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பார்க்கிங் வசதியால் 2000க்கும் மேற்பட்ட கார்களை நிறுத்த இடம் இருக்கும் என்கிறார்கள்.
வருடத்திற்கு சுமார் 4 மில்லியனிலிருந்து 16 மில்லியன் வரை மக்கள் வந்து செல்ல வசதியாக விமான நிலையம் அமையும். சென்னை விமான நிலையம் விரிவாக்கப்பட்டால், இயல்பாகவே சென்னைக்கு வந்து செல்லும் வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது உண்மை.
‘சென்னை விமான நிலையம் விரிவாக்கம்’ என்பது ஒரு திட்டம் மட்டும் அல்ல. இதன் மூலம் எத்தனையோபேர் பயனடைவதற்கான வாய்ப்பு உண்டாகியிருக்கிறது. பல வெளி நாட்டுப் பயணிகள், வசதிக்குறைவு என்கிற மன வருத்தம் இல்லாமல், சர்வதேச தரத்தில் அமைந்த வெளிநாட்டு விமான நிலையத்துக்கு வந்து திருப்தியுடன் திரும்பிச் செல்வார்கள். இதன் மூலம், இயல்பாகவே வெளிநாட்டு பயணிகளின் வருகையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
(21.10.2008ல் ஆல் இண்டியா ரேடியோவில் வாசிக்கப்பட்டது)
லேபிள்கள்:
வானொலி
செவ்வாய், ஏப்ரல் 18, 2006
எனக்கொரு இடம் வேண்டும்
பணமும் வேண்டாம்
பதவியும் வேண்டாம்
இடம் வேண்டும் - எனக்கொரு
இடம் வேண்டும்
நøடபாøத நாயகர்கள்
பிச்øசபோடும் பக்தர்கள்
சோம்பி திரியும் சோம்பேறிகள்
இவர்களில்லா இடத்தில் - எனக்கொரு
இடம் வேண்டும்
பசியில் வாடும் பச்சிளங்குழந்øதகள்
அடுக்காய் பெத்xபோடும் அன்øனகள்
தண்ணியில் மிதக்கும் தரங்கெட்ட தந்øதகள்
இவர்களில்லா இடத்தில் - எனக்கொரு
இடம் வேண்டும்
சண்øடயில்லாத குடும்பங்கள்
சாதியில்லா சமுதாயங்கள்
மதங்களில்லாத தெய்வங்கள்
இøவகள் மத்தியில் - எனக்கொரு
இடம் வேண்டும்
அரசியல்வாதிகøள காணாத கண்கள்
வாக்குறுதிகøள பொய்க்காத வாய்கள்
அராஜகமில்லா அரசுகள்
இøவகள் இருக்குமிடத்தில் - எனக்கொரு
இடம் வேண்டும்
பணமும் வேண்டாம்
பதவியும் வேண்டாம்
இடம் வேண்டும் - எனக்கொரு
இடம் வேண்டும்
நøடபாøத நாயகர்கள்
பிச்øசபோடும் பக்தர்கள்
சோம்பி திரியும் சோம்பேறிகள்
இவர்களில்லா இடத்தில் - எனக்கொரு
இடம் வேண்டும்
பசியில் வாடும் பச்சிளங்குழந்øதகள்
அடுக்காய் பெத்xபோடும் அன்øனகள்
தண்ணியில் மிதக்கும் தரங்கெட்ட தந்øதகள்
இவர்களில்லா இடத்தில் - எனக்கொரு
இடம் வேண்டும்
சண்øடயில்லாத குடும்பங்கள்
சாதியில்லா சமுதாயங்கள்
மதங்களில்லாத தெய்வங்கள்
இøவகள் மத்தியில் - எனக்கொரு
இடம் வேண்டும்
அரசியல்வாதிகøள காணாத கண்கள்
வாக்குறுதிகøள பொய்க்காத வாய்கள்
அராஜகமில்லா அரசுகள்
இøவகள் இருக்குமிடத்தில் - எனக்கொரு
இடம் வேண்டும்
லேபிள்கள்:
கவிதை
புதன், பிப்ரவரி 22, 2006
அழகில் உறங்குது அறிவு
கண்மூடி தியானித்தேன்
இறைவன் வந்தான்
அவனிடம் எது அழகு என்றேன்?
நீயே கூறு என்றான்.
பிறந்த குழந்தையழகா?
அக்குழந்தையின் சிரிப்பழகா?
அது தவழ்வதழகா?
மழலைப் பேச்சழகா? - இவற்றில்
எது அழகு என்றேன்.
எதுவுமில்லை என்றே சொன்னான்!
அன்னையின் அணைப்பழகா?
அவள் பாடும் தாலாட்டழகா?
கொஞ்சும் மொழியழகா?
கோபம் கொள்வதழகா? - இவற்றில்
எது அழகு என்றேன்.எதுவுமில்லை என்றே சொன்னான்!
ஒலைக் குடிசையழகா?
ஓய்யார மாளிகையழகா?
ஏழைச் சிரிப்பழகா?
ஏமாற்றுவோர் சிரிப்பழகா? - இவற்றில்
எது அழகு என்றேன்.
அதே பதிலைச் சொன்னான்!
உழவன் உழுவதழகா?
தொழிலாளி உழைப்பதழகா?
பச்சை வயலழகா?
பாயும் நீர் அழகா? - இவற்றில்
எது அழகு என்றேன்.
மீண்டும் அதையே சொன்னான்!
கதிரவன் தோன்றும் கடலழகா?
கார்மேகக் கூட்டமழகா?
நிலவு தோன்றும் மாலையழகா?
மாலை வீசும் தென்றலழகா? - இவற்றில்
எது அழகு என்றேன்.
அதே பதில்தான் சொன்னான்!
கடும்கோபம் நான் கொண்டு
கண்கள் சிவக்க வெறிகொண்டு
எதுதான் அழகு?
என்றேன் சற்றே கனல் பறக்க!
பார்வதியைப் பார்த்து சிரித்துக் கொண்டே
ஒருவரியில் அவனும் சொன்னான்பெண்மையே அழகென்று!பரமனின் அறிவும் உறங்குதென்றுகண் விழித்தேன்!
எதிரில் கட்டான குமரி!
கண்மூடி தியானித்தேன்
இறைவன் வந்தான்
அவனிடம் எது அழகு என்றேன்?
நீயே கூறு என்றான்.
பிறந்த குழந்தையழகா?
அக்குழந்தையின் சிரிப்பழகா?
அது தவழ்வதழகா?
மழலைப் பேச்சழகா? - இவற்றில்
எது அழகு என்றேன்.
எதுவுமில்லை என்றே சொன்னான்!
அன்னையின் அணைப்பழகா?
அவள் பாடும் தாலாட்டழகா?
கொஞ்சும் மொழியழகா?
கோபம் கொள்வதழகா? - இவற்றில்
எது அழகு என்றேன்.எதுவுமில்லை என்றே சொன்னான்!
ஒலைக் குடிசையழகா?
ஓய்யார மாளிகையழகா?
ஏழைச் சிரிப்பழகா?
ஏமாற்றுவோர் சிரிப்பழகா? - இவற்றில்
எது அழகு என்றேன்.
அதே பதிலைச் சொன்னான்!
உழவன் உழுவதழகா?
தொழிலாளி உழைப்பதழகா?
பச்சை வயலழகா?
பாயும் நீர் அழகா? - இவற்றில்
எது அழகு என்றேன்.
மீண்டும் அதையே சொன்னான்!
கதிரவன் தோன்றும் கடலழகா?
கார்மேகக் கூட்டமழகா?
நிலவு தோன்றும் மாலையழகா?
மாலை வீசும் தென்றலழகா? - இவற்றில்
எது அழகு என்றேன்.
அதே பதில்தான் சொன்னான்!
கடும்கோபம் நான் கொண்டு
கண்கள் சிவக்க வெறிகொண்டு
எதுதான் அழகு?
என்றேன் சற்றே கனல் பறக்க!
பார்வதியைப் பார்த்து சிரித்துக் கொண்டே
ஒருவரியில் அவனும் சொன்னான்பெண்மையே அழகென்று!பரமனின் அறிவும் உறங்குதென்றுகண் விழித்தேன்!
எதிரில் கட்டான குமரி!
லேபிள்கள்:
கவிதை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
