வெள்ளி, ஏப்ரல் 29, 2011

பாலபாரதியை வாழ்த்துவோம்...

0 கருத்துகள்

‘நாங்க’

விரைவில் திரைக்கு வரவிருக்கும் ‘நாங்க’ படத்தின் பாடல்களை இணைய தளத்தில் கேட்டேன். மிகவும் பிடித்திருந்தது.

இசையமைப்பாளர் யார்? தல அஜீத் முதல் படத்துக்கு இசையமைத்த பாலபாரதிதான்.

தலைவாசல், அமராவதி போன்ற சில படங்களுக்கு இசையமைத்து காணாமல் போனவர். இப்போது இந்தப் படத்தின் மூலம் மீண்டும் இசையமைக்க வந்திருக்கிறார். வாய்ப்பு தந்தவர் இயக்குநர் செல்வா. காரணம் 80களில் நடைபெற்ற சம்பவங்களைக் கொண்ட படமாம்.

அப்போது இசைஞானி இளையராஜா பீக்கில் இருந்தார். அதனால்தான் அவரால் பாராட்டப்பட்ட பாலபாரதி இசையமைக்க அழைத்திருக்கிறார் போலும். (நீலா மாலா தொலைக்காட்சி தொடரின் பின்னணி இசையைக் கேட்டு ஆச்சரியப்பட்டாராம் இளையராஜா).

படத்தில் மொத்தம் 8 பாடல்கள் இதில் 6 பாடல் மெலடியானவை. 2 பாடல்கள் ஜனரஞ்சகப் பாடல்கள்.

முதல் பாடலும், இறுதிப் பாடலும் ஒரே மெட்டுதான். முதல் பாடலை ஆண் குரலில் கார்த்திக் பாடியுள்ள ‘தேவதையா... அவள் தேவதையா...’ பெண் குரலில் ஷைலஜா சுப்ரமண்யம் காதலனே... இவளின் காதலனே... என்றும் பாடியிருக்கிறார்கள். நன்றாகவே உள்ளது. கொஞ்சம் டிவி சீரியல் வாசனை.

ரவி, அனிதா சுரேஷ் பாடிய முத்தமிழே, முத்தமிழே... நீ வருவாயா சூப்பர். இளையராஜாவின் பனிவிழும் மலர் வனம் பாடலை நினைவுப்படுத்துகிறது.

கார்த்திக், சின்மயி பாடிய இதழில் கதை எழுத வேண்டும்... என்ற பாடலும்,

விஜய் பிரகாஷ, ஷைலஜா சுப்ரமண்யம் எங்கே எங்கே காதல் எங்கே என்ற பாடலும் அருமை.

இந்த நான்கு பாடல்களுமே திரும்ப திரும்ப கேட்க தூண்டுகிறது.

ஹரிசரண், ஷைலஜா சுப்ரமண்யம் பாடிய எனது நெஞ்சிலே இருப்பதென்னவோ.... கொஞ்சம் பாஸ்ட் பாடல். சுமார் ரகம். பாடலின் இடையிடையில் பாபி இந்திப் பாடல்களின் பிட்ஸ் சேர்த்திருக்கிறார்கள்.

அடியே... வாடி பொட்டப்புள்ள.., ஜனரஞ்சகப் பாடல்.

ரொமான்ஸ் ரௌடிங்க நாங்க... இப்பாடலில் ஆங்காங்கே கவுண்டமணி டயலாக்கை சேர்த்திருக்கிறார்கள். இதுவும் ஜனரஞ்சகப் பாடல்தான். இப்பாடல் அனைவரையும் கவரும்.

இசையமைப்பாளர் பாலபாரதி அடுத்த ரவுண்டுக்கு தயாராகி விட்டார். நல்ல மெலடிகளை தரக்கூடியவர் வாழ்த்துவோம். வாங்க...