பதிவர்கள் அனைவருக்கும், பதிவுகளைப் படிக்கும் அனைவருக்கும்
என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்
சனி, ஜனவரி 01, 2011
வெள்ளி, டிசம்பர் 31, 2010
எந்தக் கவிப் பாடினாலும்
நீண்ட நாள் ஆகிவிட்டது பிளாக் எழுதி. இந்த ஆண்டின் கடைசி நாளான டிசம்பர் 31ம் தேதிக்குள் எப்படியாவது எழுதிவிட வேண்டும் என்று முடிவெடுத்தேன்.
டிசம்பர் 31. மதியம் 3.00 மணிக்கு.
டிசம்பர் மாதம் வந்தாலே இசை விழாக்கள்தான். நினைவுக்கு அந்த இசையைப் பற்றி ஏதாவது எழுதிவிடலாமா? அதன் விளைவுதான் இப்பதிவு.
மதுரை என். சோமசுந்தரம் என்கிற சோமு என்று சொன்னால் இப்போது எத்தனைப் பேருக்குத் தெரியுமோ? தெரியவில்லை. ‘மருதமலை மாமணியே முருகைய்யா’ என்ற பாடலைச் சொல்லி அவர்தான் மதுரை சோமு என்று சொன்னால், ‘ஒ... ’ அவரா என்பார்கள். அந்தப் பாடலைக் கேட்காதவர்களே இருக்கமாட்டார்கள் என்பது என் எண்ணம்.
அவர் பாடிய மற்றொருப் பாடல்தான்‘எந்தக் கவிப் பாடினாலும்’. இந்தப் பாடலை தற்போது பிரபல கர்நாடக இசைப் பாடகி அருணாசாய்ராம் மட்டுமே இப்போது பாடுகிறார். ஆனாலும் மதுரை சோமு குரலில் இந்தப் பாடலைக் கேட்டுவிட்டு, அருணாசாய்ராம் குரலில் பாடலைக் கேட்கும்போது நிறைய வித்தியாசங்களை அறிந்தேன்.
மதுரை சோமு பாடியதைக் கேட்கும்போது மனதை ஏதோ நெருடுவதை உணந்தேன்.
அருணா சாய்ராம் பாடலிலும் மனம் உருகினாலும், அவர் வார்த்தைகளை உடைத்து உடைத்து பாடுவதால் கேட்பதற்கு கொஞ்சம் சிரமமாய் இருக்கிறது.
உதாரணமாக சோதனையோ என்ற வார்த்தையை, ஸோ..... தனை.....யா... என்றும்,
முருகா என்பதை முருகா... முருகா... என்றும்
அன்னையும் அறிய... வில்லை
இதுபோன்று சில வார்த்தைகளை உடைத்து உடைத்து பாடுகிறார் அருணா சாய்ராம். எனவே நெருடல் ஏற்படுகிறது என்று எண்ணுகிறேன்.
மதுரை சோமு பாடியதைக் கேட்கும்போது இதுபோன்ற எவ்விதத் தவறும் எனக்கு தெரியவில்லை.
இதோ உங்களுக்காக அவர்கள் பாடிய பாடல். கேளுங்கள்.
மதுரை என். சோமு
அருணா சாய்ராம்
இரண்டு பாட்டையும் கேளுங்கள். மகிழுங்கள்.
லேபிள்கள்:
அருணா சாய்ராம்,
என்ன கவி பாடினாலும்,
மதுரை சோமு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)