புதன், ஜூலை 15, 2009

சரிசெய்யப்பட்ட இரும்பு தூண்

1 கருத்துகள்நேற்று கேபிள் ஓயரில் தொங்கிக்கொண்டிருந்த இரும்பு தூண் பற்றி புகைப்படம் வெளியிட்டிருந்தேன். இன்று காலை செல்லும்போது பார்த்தேன். தமிழ்நாடு மின்சார வாரியம் துரித நடவடிக்கையில் ஈடுபட்டு புதிய இரும்பு தூணை அமைத்ததோடு பள்ளி மாணவர்களையும், பொதுமக்களையும் பெரும் ஆபத்திலிருந்து பாதுகாத்துள்ளது. மிக வேகமாக செயல்பட்டு பழுதை சரிசெய்த மின்சார வாரியத்திற்கு நன்றி. இதுபோல் மின்வெட்டையும் சீர் செய்தால் நன்றாக இருக்கும்.

செவ்வாய், ஜூலை 14, 2009

இரும்புத் தூண்

1 கருத்துகள்
இன்று காலை நான் பைக்கில் சென்று கொண்டிருக்கும்போது மந்தவெளி ஸ்கூல் வியூ ரோட்டிலுள்ள ‘சிகப்பி ராமசாமி தொடக்கப்பள்ளி’யின் அருகில் உள்ள இரும்பு தூண் உடைந்து கேபிள் ஒயரில் தொங்கிக்கொண்டிருந்தது. அதனை என் செல்போனில் படம் பிடித்தேன். (படம் கீழே) பள்ளிக்கு அருகிலுள்ள இந்த உடைந்த தூணை உடனே அகற்ற வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் வேண்டுகோள்.