செவ்வாய், ஏப்ரல் 18, 2006

2 கருத்துகள்
எனக்கொரு இடம் வேண்டும்

பணமும் வேண்டாம்
பதவியும் வேண்டாம்
இடம் வேண்டும் - எனக்கொரு
இடம் வேண்டும்

நøடபாøத நாயகர்கள்
பிச்øசபோடும் பக்தர்கள்
சோம்பி திரியும் சோம்பேறிகள்
இவர்களில்லா இடத்தில் - எனக்கொரு
இடம் வேண்டும்

பசியில் வாடும் பச்சிளங்குழந்øதகள்
அடுக்காய் பெத்xபோடும் அன்øனகள்
தண்ணியில் மிதக்கும் தரங்கெட்ட தந்øதகள்
இவர்களில்லா இடத்தில் - எனக்கொரு
இடம் வேண்டும்

சண்øடயில்லாத குடும்பங்கள்
சாதியில்லா சமுதாயங்கள்
மதங்களில்லாத தெய்வங்கள்
இøவகள் மத்தியில் - எனக்கொரு
இடம் வேண்டும்

அரசியல்வாதிகøள காணாத கண்கள்
வாக்குறுதிகøள பொய்க்காத வாய்கள்
அராஜகமில்லா அரசுகள்
இøவகள் இருக்குமிடத்தில் - எனக்கொரு
இடம் வேண்டும்

புதன், பிப்ரவரி 22, 2006

1 கருத்துகள்
அழகில் உறங்குது அறிவு

கண்மூடி தியானித்தேன்
இறைவன் வந்தான்
அவனிடம் எது அழகு என்றேன்?
நீயே கூறு என்றான்.

பிறந்த குழந்தையழகா?
அக்குழந்தையின் சிரிப்பழகா?
அது தவழ்வதழகா?
மழலைப் பேச்சழகா? - இவற்றில்
எது அழகு என்றேன்.
எதுவுமில்லை என்றே சொன்னான்!

அன்னையின் அணைப்பழகா?
அவள் பாடும் தாலாட்டழகா?
கொஞ்சும் மொழியழகா?
கோபம் கொள்வதழகா? - இவற்றில்
எது அழகு என்றேன்.எதுவுமில்லை என்றே சொன்னான்!

ஒலைக் குடிசையழகா?
ஓய்யார மாளிகையழகா?
ஏழைச் சிரிப்பழகா?
ஏமாற்றுவோர் சிரிப்பழகா? - இவற்றில்
எது அழகு என்றேன்.
அதே பதிலைச் சொன்னான்!

உழவன் உழுவதழகா?
தொழிலாளி உழைப்பதழகா?
பச்சை வயலழகா?
பாயும் நீர் அழகா? - இவற்றில்
எது அழகு என்றேன்.
மீண்டும் அதையே சொன்னான்!

கதிரவன் தோன்றும் கடலழகா?
கார்மேகக் கூட்டமழகா?
நிலவு தோன்றும் மாலையழகா?
மாலை வீசும் தென்றலழகா? - இவற்றில்
எது அழகு என்றேன்.
அதே பதில்தான் சொன்னான்!

கடும்கோபம் நான் கொண்டு
கண்கள் சிவக்க வெறிகொண்டு
எதுதான் அழகு?
என்றேன் சற்றே கனல் பறக்க!

பார்வதியைப் பார்த்து சிரித்துக் கொண்டே
ஒருவரியில் அவனும் சொன்னான்பெண்மையே அழகென்று!பரமனின் அறிவும் உறங்குதென்றுகண் விழித்தேன்!
எதிரில் கட்டான குமரி!