‘நான் கடவுள்’ பாலா படம்.
படம் அருமையாக இருக்கு, பயங்கரமா இருக்கு, பரவாயில்ல, வேஸ்ட் என்று பலரும் பலவிதமாய் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஜெயமோகன் நாவல் போல் படம் இல்லை என்கிறார்கள். நானும் அந்த நாவலை படித்ததில்லை. படிக்க வேண்டும்.
‘நல்லவேள தல தப்பிச்சுட்டாரு. இல்லன்னா...’ என்று பெருமூச்சு விடுகிறார்களாம் அஜீத் ரசிகர்கள் .
எனக்கென்னவோ பாலா படங்களில் ஒரு படமும் பிடிக்கவில்லை. ஏனென்று கேட்டால் தெரியாது. பாலா படத்திலெல்லாம் ‘கஞ்சா’வுக்கு முக்கியத்துவம் தருவதாக என் மனத்துக்கு படுகிறது.
ஆர்யா அரைமணி நேரம் தான் வருகிறாராம். இதற்காகவா மூன்று வருடங்கள் மெனக்கெட்டு நடித்தார்.
படத்தின் நாயகி பூஜா அருமையாக நடித்திருக்கிறார் அவருக்கு அவார்டு கண்டிப்பாக உண்டு என்று ச.ந. கண்ணன் அடித்து சொல்லுகிறார். காத்திருப்போம்.
பூஜா என்றவுடன்தான் எனக்கு ஞாபகம் வருகிறது?
நேற்று தற்செயலாக ‘நான் கடவுள்’ பாடல்களைக் கேட்பதற்காக, தமிழ்பீட். காம்-விற்குச் சென்றேன். ‘நான் கடவுள்’ படத்தின் ஸ்டில்லை கண்டேன். அதில் ஆர்யாவுடன் பூஜாவிற்குப் பதிலாக பாவனா இருக்கிறார்.
1 கருத்து:
பாலாவின் படம் பார்க்குறதுக்குன்னு ஒரு மனநிலை வேணும். அந்த மனநிலைக்குத் தயாரா இல்லாதவங்க, தைரியம் இல்லாதவங்க - படத்தை தவிர்ப்பதே நல்லது.
கருத்துரையிடுக