புதன், பிப்ரவரி 22, 2006

1 கருத்துகள்
அழகில் உறங்குது அறிவு

கண்மூடி தியானித்தேன்
இறைவன் வந்தான்
அவனிடம் எது அழகு என்றேன்?
நீயே கூறு என்றான்.

பிறந்த குழந்தையழகா?
அக்குழந்தையின் சிரிப்பழகா?
அது தவழ்வதழகா?
மழலைப் பேச்சழகா? - இவற்றில்
எது அழகு என்றேன்.
எதுவுமில்லை என்றே சொன்னான்!

அன்னையின் அணைப்பழகா?
அவள் பாடும் தாலாட்டழகா?
கொஞ்சும் மொழியழகா?
கோபம் கொள்வதழகா? - இவற்றில்
எது அழகு என்றேன்.எதுவுமில்லை என்றே சொன்னான்!

ஒலைக் குடிசையழகா?
ஓய்யார மாளிகையழகா?
ஏழைச் சிரிப்பழகா?
ஏமாற்றுவோர் சிரிப்பழகா? - இவற்றில்
எது அழகு என்றேன்.
அதே பதிலைச் சொன்னான்!

உழவன் உழுவதழகா?
தொழிலாளி உழைப்பதழகா?
பச்சை வயலழகா?
பாயும் நீர் அழகா? - இவற்றில்
எது அழகு என்றேன்.
மீண்டும் அதையே சொன்னான்!

கதிரவன் தோன்றும் கடலழகா?
கார்மேகக் கூட்டமழகா?
நிலவு தோன்றும் மாலையழகா?
மாலை வீசும் தென்றலழகா? - இவற்றில்
எது அழகு என்றேன்.
அதே பதில்தான் சொன்னான்!

கடும்கோபம் நான் கொண்டு
கண்கள் சிவக்க வெறிகொண்டு
எதுதான் அழகு?
என்றேன் சற்றே கனல் பறக்க!

பார்வதியைப் பார்த்து சிரித்துக் கொண்டே
ஒருவரியில் அவனும் சொன்னான்பெண்மையே அழகென்று!பரமனின் அறிவும் உறங்குதென்றுகண் விழித்தேன்!
எதிரில் கட்டான குமரி!