இக்பால்
(இந்தித் திரைப்படம்)
என்னடா எல்லாரும் புதுசா ரிலீஸான ‘நான் கடவுள்’ பத்தி எழுதுறாங்கன்னா. நீ மட்டும் என்ன பழைய இந்திப் படத்தைப் பற்றி எழுதுற என்று நினைக்காதீங்க.
ஏன்னா...
·
சனிக்கிழமை தோறும் தூர்தர்ஷன் நேஷனல் சேனலில் இந்திப் படம் பார்ப்பேன். சில நேரங்களில் நல்லப் படங்களையும், சில நேரங்களில் குப்பையான படங்களையும் பார்க்க நேர்ந்திருக்கிறது.
இந்த வார சனிக்கிழமை ‘இக்பால்’ என்ற படத்தினை பார்த்தேன் இரண்டாவது முறையாக.
கிரிக்கெட் சம்பந்தமான படம். பிறவிலேயே காது கேளாத, பேசவும் முடியாத இக்பாலுக்கு கிரிக்கெட் என்றால் கொள்ளைப் பிரியம். சாதாரண கிராமத்தில், சாதாரண குடும்பத்தில் பிறந்த இக்பால் எப்படி இந்தியக் கிரிக்கெட் டீமில் இடம் பெறுகிறான் என்பதே கதை.
இக்பாலாக நடித்த பையன் அருமையாக நடித்திருக்கிறான். நஷருதீன் ஷா, கிரீஷ் கர்னாட் இருவரில் ஷா பேரை தட்டிச் சென்றுவிடுகிறார்.
இக்பாலின் தங்கை நடித்த சிறுமி, தாயாக நடித்த பெண், தந்தையாக நடித்தவர்கள் தங்களின் பங்கை சிறப்பாக செய்திருந்தனர்.
இந்த ஆறுபேரைச் சுற்றிதான் கதை நடக்கிறது. திரைக்கதையில் எங்கும் தொய்வில்லாமல் விறுவிறுப்பாக செல்கிறது. படத்தின் பிற்பாதியில் வரும் காட்சிகள் யாவும் மனதைத் தொடுகின்றன.
எனக்கு இந்தி தெரியாவிட்டாலும் இத்திரைப்படம் பார்ப்பதற்கு நன்றாக இருந்தது. அனைவரும் இந்த படத்தினை பார்க்கலாம்.
சூப்பர் இக்பால்!
3 கருத்துகள்:
அண்ணாச்சி அப்படியே ஒரு வரி கதையையும் சொல்லியிருந்தீங்கன்னா வசதியா இருந்திருக்கும் ;)
அண்ணாச்சி
evalovu thappu
sentence missing
அண்ணாச்சி
அறிமுகத்திற்கு நன்றி அண்ணாச்சி...
கருத்துரையிடுக