ஞாயிறு, ஜூன் 17, 2012

தந்தையர் தினம்

தந்தையர் தினத்தையொட்டி நான் எழுதிய கவிதைகள் சில...


பிரச்னைகளிலிருந்து
என்னைக் காக்கும்
பிதாமகன்

*

நான் தேடிய அனைத்தையும்
எனக்களித்து உயிர்கொடுத்த
கூகுள்

*

புரியாமலிருந்த அனைத்தையும்
புரிய வைத்த என்
ஏழாம் அறிவு

*

சோகங்களில் சோர்வடையாமல்
சந்தோசங்கள் தலைக்கேறாமல் - உன்
அனுபவங்களை எனக்கு பாடமாக்கிய
அறிவுத்தந்தை


*
எதைப் பார்ப்பது?
எதைப் படிப்பது?
எதை எடுப்பது?
எதை விடுவது?
எதை பிடிப்பது?
என்று எதுவும் தெரியாமலிருந்தவனுக்கு
அனைத்தையும் விளங்க வைத்த
என் ஞானக்கண்

கருத்துகள் இல்லை: