இந்த ஆண்டு இனிய ஆண்டாக தொடங்கட்டும்.
சென்ற ஆண்டும் இனிய ஆண்டாகத்தான் தொடங்கியது. இருந்தாலும் தமிழ்நாட்டுக்கு நிறைய பிரச்னைகள் வந்துகொண்டே இருந்தது. இன்னும் இருந்துகொண்டே இருக்கின்றன.
கூடங்குளம் அனல்மின் நிலையம், முல்லைப் பெரியாறு அணை, ஆட்சி மாற்றம், பேருந்து பயணச் சீட்டுக் கட்டணம் ஏற்றம், ஆவின் பால் விலை உயர்வு என பல பிரச்னைகள்.
பெட்ரோல் விலை உயர்வு, சமையல் கேஸ் விலை உயர்வு என மத்திய அரசும் விலை உயர்த்தியது.
தீபாவளி தீபாவளியாக பலர் கொண்டாடவில்லை காரணம் விலையேற்றம்.
கிறிஸ்துமஸ் கிறிஸ்துமஸாக கொண்டாட முடியவில்லை காரணம் விலையேற்றம்.
இப்படி விலையேற்றத்தில் பெரியவர்கள் கஷ்டப்பட்டார்கள் என்றால்,குழந்தைகளும் பிரச்னையில் சிக்கிக்கொண்டதுதான் வேடிக்கை. பள்ளிக்குச் சென்ற குழந்தைகள் என்ன கல்வி படிப்பது? சமச்சீர் கல்வியா? இல்லையா என்று கிட்டதட்ட மூன்று மாதங்கள் பாடப் புத்தகங்கள் இல்லாமல் சென்று வந்தது. பிரச்னைகளின் உச்சம்.
இறுதியில் குழந்தைகள் சமச்சீர் கல்வி பயில வேண்டும் என்று உச்சநீதி மன்றம் கூறினாலும், இன்னும் பல பள்ளிகளில் சின்னஞ்சிறு குழந்தைகள் இன்றும் இரட்டைப் பாடங்கள் படிப்பது வேதனையான விஷயமாகவே தொடருகிறது. அதென்ன இரட்டைப் பாடங்கள். அதொன்றுமில்லை சமச்சீர் கல்வியை இரண்டாம் தரப் பாடமாக வைத்துக்கொண்டு, முதல் தர பாடமாக மெட்ரிக்குலேஷன் பள்ளி ஏற்கனவே சொல்லித் தந்தப் பாடங்களைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருப்பது.
இதுபோன்ற பிரச்னைகளுக்கு இந்த வருடத்தில் ஒரு முடிவு வர நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இருப்போம்.
அது ஒன்றுதான் பிரச்னையில்லாதது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக