வெள்ளி, ஏப்ரல் 17, 2009

என்ன கொடுமை வைகோ?

அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்








அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றதை ஜெயா டிவியில் கண்டுகளிக்கும் வாய்ப்பினைப் பெற்றேன்.

நான் பார்க்கும்போது சிம்மகுரலோன் வைகோ பேசிக் கொண்டிருந்தார். எப்போதும் போல உணர்ச்சிகரமாக, வீராவேசமாக அனல் பறக்கின்ற வார்த்தைகளைக் கொட்டி பேசினார். ஆனால் கூட்டத்தினரிடம் இருந்து எவ்வித பிரதிபலிப்பும் தென்படவில்லை.

அடுத்ததாக வந்தது புரட்சித் தலைவியின் அண்ணன் ராமதாசு பேச வந்தார். தவளைப் போல ஙொய் ஙொய் என்று ஏதோ ஏதேதோ பேசினார். நாற்பதும் நமதே என்றார் இறுதியில். கூட்டத்தினர் இப்போது அமைதி காத்தனர்.

அடுத்தபடியாக கம்யூனிஸ்ட் ராஜா பேசினார். தமிழை தட்டுதடுமாறி பேசினார் என்றே சொல்லலாம். அவருக்குப்பின் ஏ.பி. பரதன் பேசினார். கூட்டம் அமைதி காத்தது-

பிரகாஷ் காரத் பேசும்போது அருமையாக பேசினார். ஆனால் கூட்டத்தினர் அமைதி காத்தனர்.

இவர்களெல்லாம் பேசி முடித்தபோது ஒருவருக்கும் கைதட்டலே கிடைக்கவில்லை. 

இறுதியாக புரட்சித் தலைவி பேச வந்தார். என்றும்போல எழுதி வைத்தே பேசினார், பேசினார், பேசிக்கொண்டேயிருந்தார். உணர்ச்சி வேகத்திலும், குரலை உயர்த்தியும் பேசினார். என்ன அதிசயம் . புரட்சித் தலைவி பேசியும் கூட கூட்டம் கைதட்டவில்லை. ஆரவாரம் செய்யவில்லை. அது ஒரு கூட்டமாகவே தெரியவில்லை. 

கூட்டத்தில் அதிமுகவினரை தவிர மற்றக்கட்சிகளின் தொண்டர் ஒருவரையும், கொடியையும் நான் பார்க்கவில்லை ஜெயா தொலைக்காட்சியில்.
இதைவிட மேடையில் அமர்ந்திருந்த தலைவர்கள் முகத்தில் ஏதோ கவலையில் இருப்பதுபோல தோன்றினார்கள்.

வேட்பாளர்களை ஒவ்வொருத்தராக அறிமுகம் செய்து வைத்தார். பாவம் வைகோ. ஜெயலலிதாவால் அறிமுகப்படுத்தப்பட்டார். 

என்ன கொடுமை சார்?




8 கருத்துகள்:

Mothiyoci சொன்னது…

ungaluku romba periya manasu sir... evlo porumaiya pathu erukinga ...

ஜோ/Joe சொன்னது…

//தவளைப் போல ஙொய் ஙொய் என்று ஏதோ ஏதேதோ பேசினார்//

:))))

உடன்பிறப்பு சொன்னது…

//பாவம் வைகோ. ஜெயலலிதாவால் அறிமுகப்படுத்தப்பட்டார்.//

இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ

பெயரில்லா சொன்னது…

சேராத இடந்தன்னில் சேர வேண்டாம்!

செருப்படிகள் கிடைக்குமிடம் போகவேண்டாம்!

பூங்குழலி சொன்னது…

பாவம் வைகோ. ஜெயலலிதாவால் அறிமுகப்படுத்தப்பட்டார்.//

இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ

பார்க்கத் தானே போறோம்

பிரதிபலிப்பான் சொன்னது…

ஏதோ உள்நோக்கத்தோடு எழுதின மாதிரி தெறியுது இருந்தாலும் உண்மையைத்தான் சொல்லி இருக்கிறீர்கள்.

அவர்கள் அப்படி இருந்தாலும் அதிக பட்சமாக வெற்றி பெருவது இந்தக் கூட்டணிதான்.

20 லிருந்து 27 தொகுதி வரை பெறப்போகும் கூட்டணி.

நெஞ்சம் சொன்னது…

நீங்க சொல்லவரது அவர்கள் எல்லம் இஞ்சித்திண்ண குரங்குப் போல் இருந்ததாக இருக்கிறது.

குப்பன்.யாஹூ சொன்னது…

who wants claps, they want votes only.