திங்கள், மே 11, 2009

தமிழர்களே இவர்களை மன்னியுங்கள்!

புதிய அதிமுக கொ.ப.செ.கள்


சீமான் ராமேஸ்வரத்தில் இலங்கைப் பிரச்னையில் பேசியதிலிருந்து அவருடைய பேச்சை இணைய தளத்தில் தேடிக் கண்டுபிடித்து கேட்பேன். அவர் உணர்வுபூர்வமாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும் பேசுவதைக் கண்டு என் ரத்தமும் உணர்வும் வெகுண்டெழும்.

பாரதிராஜா தலைமையில் திரைப்பட இயக்குநர்கள் தேர்தலில் இந்திரா காங்கிரஸுக்கு எதிராக பிரசாரம் செய்கிறார்கள்.

சீமான் பேச்சை நேற்று நான் ஜெயா டிவியில் கேட்டேன். சீமான் இத்தனை நாள்கள் இலங்கைப் பிரச்னைகளை பேசும்போது உணர்வும் உணர்ச்சியும் இருந்த அவரது பேச்சு. நேற்று அவர் பேச்சைக் கேட்குமபோது எனக்கு ஏற்படவில்லை. காரணம் அவர் அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளராகவே மாறியிருந்தார் என்று சொல்லலாம். பேச்சில் வரி வரிக்கு இரட்டை இலைக்கு ஓட்டு போடுங்கள். இரட்டை இலைக்கு ஓட்டு போடுங்கள் என்று பேசினார் என்றால் பார்த்துகொள்ளுங்களேன்.

பாரதிராஜா இவர் சமீப ஆண்டுகளாக தமிழ் மேலும், தமிழினத்தின் மேலும் இவருக்கு புதுசா உணர்வு பிறந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இன்று வாய்கிழிய என் தமிழன், என் தமிழினம் என்று பேசும் இவர் 1983 இலங்கைப் பிரச்னை நடைபெற்றபோது வாய் மூடி மவுனியாக இருந்தார் என்பது அவருக்கே வெளிச்சம்.

இவர்கள் செய்வது தவறு என்று சொல்லவில்லை. ஆனால் இத்தனை வருடங்களாக விடுதலைப் புலிகளினால் எனக்கு ஆபத்து, பிரபாகரனை இங்கு அழைத்து வந்து தூக்குத் தண்டனை தர வேண்டும் என்று பேசியதோடு, விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு தடை போடுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் ஜெயலலிதா என்பதை இவர்களுக்கு தெரியுமா? அல்லது தெரியாதா? சாகப் போகிற நேரத்தில் சங்கரா சங்கரா என்பதுபோல இத்தனை ஆண்டுகள் எதுவும் பேசாமல் இப்போது தீடீர் ஞானோதயம் வந்ததுபோல் தனி ஈழம் அமைக்கப் பாடுபடுவேன் என்பது ஓட்டுக்காக என்பது பாரதிராஜா, சீமானுக்கு போன்ற சிறந்த இயக்குநர்களுக்கு விளங்காமல் இருப்பது வருத்தத்தை அளிக்கிறது. பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் ஆன கதைதான் ஞாபகம் வருகிறது. இதில் ஏதேனும் தவறு ஏற்பட்டால் தமிழர்களே இவர்களை மன்னியுங்கள்!

3 கருத்துகள்:

இசை சொன்னது…

http://aatrangaraininaivugal.blogspot.com/

ttpian சொன்னது…

கருனானித்யிடம் ஒரு கேள்வி
ஆச்சர்யமாக உள்ளது-
இறந்து போனவர்களிடமும்,பிராணிகலிடமும்,கேள்வி கேட்டால் பதில் கிடைக்காது!

உண்மை விளம்பி சொன்னது…

தலைவா மேட்டர் தெரியாதா? சன் டிவி ராஜ் டிவியெல்லாம் சொந்தமா படம் எடுக்கறாங்கல்ல? அந்தமாதிரி ஜெயா டிவியும் எடுக்கப்போறாங்க. டுபாகூர் படமா குடுத்து விஆர் எஸ் வாங்கின சீமானுக்கு இவங்க டைரக்சன் சான்ஸ் தரதா சொல்லித்தான் இழுத்தாங்க. எல்லாம் பொழப்பு நைனா. இன உணர்வாவது புண்ணாக்காவது. எலக்சன் முடிஞ்சி அம்மா வெயிட்டா சீட்டு புடிச்சிட்டாங்கன்னா சீமான் ப்ராஜக்டு ஆரம்பிச்சிரும். வெயிட் பண்ணிப்பாருங்க.