வெள்ளி, ஜனவரி 16, 2009


மக்கள் தொலைக்காட்சியின் சிறப்பு

இந்த பொங்கலன்று தொலைக்காட்சிகள் எல்லாம் சின்னத்திரையில் முதல் முறையாக என்று படப் பொங்கல் வைத்தன. நான் அந்தத் தொல்லைக்காட்சிகளையெல்லாம் பார்க்காமல் இருந்ததற்கு என் அப்பாவிற்கு நன்றியைச் சொல்லிக்கொள்ள வேண்டும். மக்கள் தொலைக்காட்சியைப் பார்க்க நேர்ந்தது. மக்கள் தொலைக்காட்சியில் ‘மக்கள் விருது - 2008’ என்ற விருதினை சிறந்த கல்வியாளர், சிறந்த கிராமம், சிறந்த சுயஉதவிக் குழு, சிறந்த மருத்துவர், சிறந்த விவசாயி, சிறந்த பதிப்பகம், சிறந்த ஓவியர், சிறந்த எழுத்தாளர், சிறந்த ஆவணப்படம், சிறந்த குறும்படம், சிறந்த மாற்று திறனாளர், சிறந்த விளையாட்டு வீரர், சிறந்த மழலை மேதை என்று 31 பேருக்கு வழங்கினார்கள். இதில் சிறப்பு என்னவென்றால் இதுவரை திரையுலகம் பக்கமே தலைசாய்க்காத மக்கள் தொலைக்காட்சி முதன்முறையாக சிறந்த திரைப்படமாக ‘பூ’ படத்தினைத் தேர்வு செய்து அதற்கும் விருது வழங்கியுள்ளார்கள். சில விருதுகளை மேடையில் இருந்து கீழே இறங்கி வந்து வழங்கியது மனதை நெகிழ வைத்தது. மக்கள் தொலைக்காட்சி தனக்கென்று ஒரு பாணி வைத்திருப்பது பாராட்ட வேண்டிய விஷயமாகும். சிறந்த தொலைக்காட்சி எதுவென்று கேட்டால் ‘மக்கள் தொலைக்காட்சி’யை யார் கேட்டாலும் சொல்லலாம்.

2 கருத்துகள்:

பிரதிபலிப்பான் சொன்னது…

நானும் சில நிகழ்ச்சிகளை பர்த்திருக்கிறேன். முனைவர் ஒருவர் அலைநீளத்தையும் அலைஎண்ணையும் பற்றியும் மிக தெளிவாக எளிய நடையில் எல்லோருக்கும் புரியும்வண்ணம் செயல்முறை விளக்கத்துடன் எடுத்தார். அன்றிலிருந்து நானும் நீங்கள் சொல்வதைப் போல நல்ல ஒரு தொலைக்காட்சி எதுவென்றால் அது மக்கள் தொலைக்காட்சி என்றுத்தான் என்னுடைய பங்கிற்க்கு மார்கெட்டிங் செய்கிறேன்.

முகில் சொன்னது…

அண்ணாச்சி...

மேலும் பல மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பற்றி எழுதுங்க. நான் தொலைக்காட்சி அவ்வளவா பார்க்குறது இல்ல, உங்க மூலமா ம.தொ.வை ரசிச்சுக்கிறேன். ;)