வியாழன், ஏப்ரல் 16, 2009

தேர்தல் தலைவர்கள்

















நம் நாட்டு ராஜாக்கள்

பாலென்பார் தேனென்பார்
பாசமே இது தானென்பார்
நானென்பார் நீயென்பார்
அண்ணன் தம்பி நாமென்பார்
பாரென்பார் படியென்பார்
பக்க பலம் நானென்பார்
காயென்பார் கனியென்பார்
காவல்காரன் நானேதானென்பார்
வாயென்பார் தாயென்பார்
உரிமையுடனே அழைத்திடுவார்
உங்கள் தொகுதி என்றாலோ
உடனே ஒடி வந்திடுவார்
தேர்தல் முடியும் வரை
முடிந்த பின்போ
பதவி கிடைத்து விட்டால்
பாராமல் சென்றிடுவார்
மந்திரி பதவி கிடைத்தாலோ
மறுதேர்தல் வரை வரமாட்டார்
அண்ணன் என்றே சென்றால்
அனுமதியில்லை என்பார்
தம்பி என்று  சென்றோ
தடியன்கள் தடுத்திடுவார்
உரிமையுடன் போனாலோ
உதறி தள்ளிவிடுவார்
உங்கள் தொகுதி என்றாலோ
உடனே தப்பியோடிடுவார்
இவர்களே நம் நாட்டு ராஜாக்கள்

3 கருத்துகள்:

பிரதிபலிப்பான் சொன்னது…

வித்தக கவிஞர் அண்ணாச்சியே கலக்கிப்புட்டீங்க !

உங்களுக்குள்ள இவ்வளவு திறமை ஒழிஞ்சிக்கிட்டு இருக்கா.

நன்றாக இருந்தது கவிதை.

வாழ்த்துக்கள்.

நெஞ்சம் சொன்னது…

சூப்பர் கவிதை !

"உழவன்" "Uzhavan" சொன்னது…

நடு ரோட்டில் ராஜாக்களின் சட்டையைப் பிடிக்கும் நாள் எந்நாளோ??