திங்கள், ஏப்ரல் 13, 2009

நாமம் போடும் ராமதாஸ்

வைகோ - 3

இந்தத் தேர்தல் அறிவிப்பு வந்தவுடனே இருதலைக் கொள்ளியாக தவித்தவர் யார் தெரியுமா?

வைகோ.

ஒவ்வொரு முறையும் வைகோவை பின்னுக்குத் தள்ளுபவர் யார் தெரியுமா?

நன்றாக யோசித்துப் பார்த்தால் டாக்டரண்ணன்தான் முதலில் நிற்பார்.

கூட்டணியில் முதலில் போய் சேருபவராக வேண்டுமானால் வைகோவாக இருக்கலாம். ஆனால் தேர்தல் நேரத்தில் கடைசியாக தான் இருப்பார்.

அன்பு சகோதரியால் பொடா சட்டத்தில் உள்ளே சென்றவர். அனைவரது முயற்சியாலும் வெளியில் வந்தார். நாடாளுமன்றத் தேர்தலில் விருதுநகரில் தான் நிற்காமல் அரசியல் துறவியாக மாறி, சிப்பிபாறை ரவிச்சந்திரனுக்கு வாய்ப்பு வழங்கினார். ஆனால் இந்த முறை விருதுநகரில் போட்டியிடுகிறாராம். மானத்தின் சின்னம், தன்மான சிங்கம் என்றெல்லாம் போற்றபட்ட வைகோ. தன்னை பொடா சட்டத்தில் சிறைக்குள் தள்ளியவரின் தயவில் விருதுநகரில் போட்டியிடுகிறார். வேடிக்கையாக இருக்கிறது வைகோ செயல்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் வைகோ திமுகவிடம் கேட்டதோ 25 இடம். கலைஞர் தருவதாக சொன்னதோ 22 இடம். 3 இடங்களுக்காக வைகோ சிறையிலிருக்கும்போது ஜெயலலிதாவை சகட்டுமேனிக்குத் திட்டி தீர்த்த நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் திமுகவை விட்டு அதிமுகவுக்கு செல்லலாம் என சொன்னதைக் கேட்டு அதிமுக சென்று, 35 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில் மட்டுமே வென்றார்கள்.

அன்றிலிருந்து இன்றுவரை ஜெயலலிதா நம்பிக்கைக்குரிய ஆளானார். நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் வைகோ அதிமுகவிடம் 7 இடங்களைதான் கேட்டது. ஆனால் 3 இடங்கள்தான் தருவோம் என கூறி, இறுதியில் 4 இடங்களைத் தந்திருக்கிறார்கள். 

அப்போதும், இப்போதும் வைகோவுக்கு கிடைக்கவேண்டியதை கிடைக்கவிடாமல் செய்தவர் யார்? அன்பு சகோதரியின் டாக்டரண்ணன்தான்.

பந்திக்கு முந்து படைக்கு பிந்து என்ற பழமொழி வைகோ, ராமதாஸ் இருவருக்குமே பொருத்தமாக இருக்கிறது.

இப்போது வைகோ இழந்ததும் 3 இடங்கள்தான். ஒவ்வொரு தேர்தலிலும் வைகோவுக்கு ராமதாஸ் நாமம் போட்டுவிடுகிறார். இதெல்லாம் எப்போதுதான் 
வைகோவுக்கும் மதிமுக சகோதரர்களுக்கும் புரியப் போகிறதோ? 

8 கருத்துகள்:

ஆர். முத்துக்குமார் சொன்னது…

அண்ணாச்சியாரே,

சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் நிறுத்தப்பட்டடது சிவகாசியில். விருதுநகரில் அல்ல.

ஆர். முத்துக்குமார் சொன்னது…

கடந்த சட்டமன்றத் தேர்தலில் முப்பத்தைந்து இடங்களில் போட்டியிட்டு ஆறு இடங்களில் மதிமுக வெற்றிபெற்றது.

nhm சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பிரதிபலிப்பான் சொன்னது…

நம்மீது குறையை வைத்துக் கொண்டு ஊரான் மீது ஏன் பழியை சுமத்த வேண்டும்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை.

ஐயா தனக்கு வேண்டியதை பெற்றது அது அவருடைய திறமையைப் பொருத்தது.

ஐயா, வைகோவிற்கு சீட்டு குறைச்சலாகத் தான் கொடுக்க வேண்டும் என்று ஒப்பந்தம் அம்மவிடம் செய்து கொண்டாரா என்ன.

இது தவறான வாதம் என்று நினக்கிறேன்.

இதிலும் அம்மாவிடம் உள்ள நெருக்கத்தை விட வைகோ விடம் ஐயாவிற்கு அதிகம்.

பெயரில்லா சொன்னது…

அம்மா தான் எங்களுக்கு எல்லாமே என்று போனாரே அவருக்கு அப்படித்தான் வேண்டும்.

ஐயா, அம்மாவை சந்தித்தன்று பத்திரைக்கையாளர்கள் மத்தியில் அம்மா பேசும் போது ஐயா இஞ்சி திண்ண குரங்கு போல இருந்தாரே அடுத்த கூட்டணிக்கு போகும் வரை அவர் அப்படித்தான் இருப்பார் போல.

ஏன் இந்த மானக்கேடு..?

பெயரில்லா சொன்னது…

very good article continue mr.muthan

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) சொன்னது…

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவண்
உலவு.காம்

வெயிலான் சொன்னது…

// சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் நிறுத்தப்பட்டடது சிவகாசியில். விருதுநகரில் அல்ல.//

முத்துக்குமார்,

பழைய சிவகாசி நாடாளுமன்றத் தொகுதி
இப்போது விருதுநகர் தொகுதியாக மாறிவிட்டது.

முத்தன் சொன்னதும் ஒருவிதத்தில் சரிதான்.